பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

55



அரைசு பட அமர் உழக்கி, உரை செல முரசு வெளவி, முடித் தலை அடுப்பு ஆகப் புனற் குருதி உலைக் கொளிஇத் தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின், அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய! ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை, நான் மறை முதல்வர் சுற்றம் ஆக, மன்னர் ஏவல் செய்ய, மன்னிய வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே நோற்றோர் மன்ற - நின் பகைவர், நின்னொடு மாற்றார் என்னும் பெயர் பெற்று, ஆற்றார் ஆயினும், ஆண்டு வாழ்வோரே.

திணையும் துறையும் அவை, அவனை மாங்குடி கிழார் பாடியது.

27. சோழன் நலங்கிள்ளி

சேற்றில் தோன்றும் தாமரை அவற்றின் இலைகள் பலவும் உதிர்வதுபோல் உயர்குடியில் பிறந்தவர் பலரும் பெயரும் புகழும் இன்றி மறைந்து விடுகின்றனர். அவர்களுள் ஒருசிலரே புலவர் பாடும் புகழைப் பெறுகின்றனர்; பாராட்டப்படுகின்றனர்.

அத்தகைய புகழ்மிக்க வாழ்க்கை வாழ நீ முற்படுவாயாக.

புலவர் பாடும் புகழ் உடையவர் மறுமையில் துறக்க வாழ்வைப் பெறுவர். திங்களின் தேய்வும், மறைவும் நிலை யாமையை உணர்த்துகின்றன. பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி. நிலையாமையை உணர்ந்து வருந்தி வந்தோர்க்கு அவர்கள் யார் எத்தகையவர் என்று பேதம் பாராமல் உணவு அருந்தச் செய்க, அருள் உள்ளம் உன்பால் நிலவுவதாக.

செல்வம் மிக்குப் பிறர் அல்லல் தீர்க்கும் ஈகை அதனால் வரும் புகழ் உன்பால் நிலவுவதாக!

உன் பகைவர்கள் கொடைத்திறன் வாய்க்காமல் தேய்ந்து அழிவு எய்துவாராக.