பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ், நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன, வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து, வீற்றிருந்தோரை எண்ணும்காலை, உரையும் பாட்டும் உடையோர் சிலரே, மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே ‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி எய்துப என்ப, தம் செய் வினை முடித்து எனக் கேட்பல்; எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி: தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும், அறியாதோரையும் அறியக் காட்டித் திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து, வல்லார்ஆயினும், வல்லுநர் ஆயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள, வல்லை ஆகுமதி; அருள் இலர் கொடா.அமை வல்லர் ஆகுக! கெடாஅத் துப்பின் நின் பகை எதிர்ந்தோரே.

திணை - பொதுவியல் துறை - முதுமொழிக்காஞ்சி. சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

28. சோழன் நலங்கிள்ளி

குருடு, தசைப்பிண்டம், கூன், குள்ளம், ஊமை, செவிடு, விலங்கு வடிவு, மந்தபுத்தி இவை குறைப் பிறவிகள்; இவற்றால் எந்த நன்மையும் விளைவது இல்லை. பேதைமை உடையவை; இவை நீங்கிப் பிறப்பது உயர் பேறு ஆகும். மானிடப் பிறவி இதனை நன்கு பயன்படுத்துவது அறிவுடைமை ஆகும். இதனை நம் முன்னோர் அறிவித்துள்ளனர்.

உன் பகை நாட்டவர் வளம் குன்றிய வாழ்க்கை உடையவர். சேவற்கோழி தினை காப்பவரைக் கூவித் துயில் எழுப்பும் கடுங்குரல்தான் அங்குக் கேட்க முடியும். அத்தகைய வன்புலக் காட்டின்கண் வாழ்பவர் நின் பகைவர்.

வேலிக்குப் புறம்பே நின்று வேண்டுவார்க்குக் கரும்பினை அகத்தே உள்ளவர் பிய்த்து எறிவர். அதனால் தாமரை மலர்கள் சிதைவு பெறும்; அது கூத்தர் ஆடும் களனை ஒத்து இருக்கிறது.