பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


அடுத்து முரசு இயம்பும் உன் முற்றத்தின்கண் அமர்ந்து

குற்றம் செய்தவரை ஒறுத்தும், நல்லவர்களுக்கு நன்மைகள்

செய்தும் நாள் ஒலக்கம் நடத்துக.

நல்லது தீது என்ற வேறுபாடு பாராமல் நல்லொழுக்கத்தைக் கைவிடும் கீழ்மையர்தம் உறவினைக் கொள்ளற்க.

கழனிகளில் பறவைகளை ஒட்டும் உழவர்கள் மீனும் கள்ளும் தெங்கிளநீரும் உண்டு மகிழும் வளம் மிக்க நாடுகளை உன் படைத் தலைவர்களுக்கு வழங்கி அவர்களைச் செல்வம் உடையவராக ஆக்குக. அவர்கள்பால் வரும் வறியவர்க்குப் பொருள் வழங்கி உதவ நீ அவர்கள் வாழ்க்கையை வளமுடையது ஆக்குக.

இவ் உலக வாழ்க்கை ஒரு நாடக மேடை போன்றது. இன்று அதில் பங்கு கொள்ளும் கூத்தர் மறுநாள் வருவது இல்லை; மாறிக் கொண்டே இருப்பர். நம் நிலையும் இவ்வாறே மாறி மாறி அமைவது ஆகும்.

உளநாள் சில; அவற்றை வளநாளாகக் கொள்க. உன் சுற்றத்தவரை மகிழ்வுபடுத்துக. அவர்கள் வாழ்க்கை மலர்ச்சி பெற உதவுக. நீ ஈட்டிய பொருள் புகழ் நாட்டுதற்குப் பயன்படுவதாக

அழல் புரிந்த அடர் தாமரை ஐது அடர்ந்த நூற் பெய்து, புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடிப் பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை! பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம் ஆங்க முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்பக் கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும், ஒடியா முறையின் மடிவு இலை ஆகி, ‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்! நெல் விளை கழனிப் படு புள் ஒப்புநர் ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு, வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின்