பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

59



இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள் பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்துக் கூவை துற்ற நாற் கால் பந்தர்ச் சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு

உதவி ஆற்றும் நண்பின் பண்புடை ஊழிற்றாக, நின் செய்கை விழவில் கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியும் இவ் உலகத்துக் கூடிய நகைப்புறன் ஆக, நின் சுற்றம்! இசைப்புறன் ஆக, நீ ஒம்பிய பொருளே!

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

30. சோழன் நலங்கிள்ளி

கதிரவன் இயக்கம், அதன் சூழ்வட்டம், அவ்வட்டத்தைச் சூழ்ந்துள்ள பல்வேறு மண்டிலங்கள், காற்று இயங்கும் திசைகள் வெற்று இடமாகிய ஆகாயம் ஆகிய இவற்றைத்தாம் நேரில் சென்று அளந்து அறிந்தவர்போல அறிந்து கூறுபவரும் உள்ளனர்.

அத்தகைய ஆற்றல்மிக்க அவ் அறிஞர்களாலும் அறிந்து கூறமுடியாதபடி உள் செறிவினை உடையவனாக விளங்குகிறாய். யானை தன் கவுளில் ஒடுக்கி எறிவதற்கு என்று கல்லை மறைத்து வைத்து உள்ளது. அது பிறர்க்குப் புலப்படாது; அதுபோல் உன் வலிமை வெளிக்காட்டாது அடக்கி வைத்துள்ளாய்; வேண்டும்போது அது வெளிப்படும் இயல்பினது. அதனால் உன்னைப் புலவர்கள் எவ்வாறு பாடுவது? அவர்களாலும் முற்றும் அறிந்து மொழிய இயலாத நிலையில் உள்ளாய்.

உன் நாடு வணிகவளம் மிக்கது ஆகும். உன் துறைமுகம் ஆகிய புகாரில் நுழையும் மரக்கலங்கள் பாய்மரத்தோடும் கூம்போடும் உள்புக அவற்றில் உள்ள பண்டங்களைச் சுமைத் தொழிலர்கள் இறக்கி வைப்பர். அவற்றை இடை நிலத்திலேயே வழியில் குவித்து வைப்பர். அத்தகைய கடல் வணிகம் உள்ள நாடு

உன் நாடு ஆகும்.