பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



செஞ் ஞாயிற்றுச் செலவும், அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், வளி திரிதரு திசையும், வறிது நிலைஇய காயமும், என்று இவை சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும் இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகிக் களிறு கவுள் அடுத்த எறிகற்போல ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட யாங்கனம் பாடுவர், புலவர்? கூம்பொடு மீப் பாய் களையாது, மிசைப் பரம் தோண்டாது. புகாஅர்ப் புகுந்த பொருங் கலம் தகாஅர் இடைப் புலப்பெரு வழிச் சொரியும் கடற் பல் தாரத்த நாடு கிழவோயே!

திணை - பாடாண் திணை, துறை - இயன்மொழி,

அவனை அவர் பாடியது.

31. சோழன் நலங்கிள்ளி

பொருளும் இன்பமும் அறத்தை ஒட்டியே அமைகின்றன. அதுபோலச் சேரன் பாண்டியன் இருவர்தம் குடைகளும் உன் குடையை ஒட்டிப் பின்னால் தொடர்கின்றன. உன் குடையே ஓங்கி உள்ளது.

போர் விரும்பி அதனால் கிடைக்கும் புகழ் இதனை அடைய நீ பாசறையை விட்டுவிலகுவது இல்லை.

உன் யானைகள் போர் வெறி கொண்டு ஆவேசத்தோடு பகைவர் மதில்களைத் தாக்குகின்றன.

போர் என்றாலே பெருவிருப்புக் கொள்ளும் உன் வீரர்கள் பகைக்களம் சேய்மையது என்று கூறி மனம் சோர்வு கொள்ளார். அவர்கள் போர் வருவதை ஆவலோடு எதிர் நோக்குகின்றனர்.

போர் முடித்து நீ கீழைக் கடலில் இருந்து மேற்கு நோக்கிச் செல்கிறாய். வெற்றி விழா எடுத்துவிட்டுப் பின் மேற்செலவைத்