பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

61


தொடர்கிறாய். எங்கே வடக்கு நோக்கி வருகிறாயோ என்ற அச்சத்தில் வடபுலத்து அரசர்கள் துயில் இழந்து நடுங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படுஉம் தோற்றம் போல, இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை, உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க, நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் பாசறை அல்லது நீ ஒல்லாயே; நூதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவிே போர் எனின், புகலும் புனை கழல் மறவர், ‘காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய, செல்வேம்.அல்லேம் என்னார் கல்லென் விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக் குண கடல் பின்னது ஆகக் குட கடல் வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப, வல முறை வருதலும் உண்டு என்று அலமந்து, நெஞ்சு நடுங்கு அவலம் பாய, துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே,

திணை - வாகை, துறை - அரச வாகை, மழபுலவஞ்சியும் ஆம்.

அவனைக் கோவூர் கிழார் பாடியது.

32. சோழன் நலங்கிள்ளி

பாணர் சுற்றத்திற்குப் பசிக்கு உணவு என்றால் வஞ்சி நகரையே வழங்கிச் சிறப்புச் செய்வான். விறலிக்குப் பூ விலைக்குப் பெறப் பொருள் தேவை என்றால் மாட மதுரையையே தருவான். யார் எது வேண்டுமானாலும் மறுக்காமல் கொடுப்பான். புலவர்களே வாருங்கள்! வந்து வேண்டிய பரிசில் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். அவனைப் பாடுவோமாக.

எதையும் தரக் கூடிய வளம் உடையது அவன் நாடு. குயவர் சிறுவர்கள் சுழற்சிச் சக்கரத்தில் களிமண்ணை வைத்து அவர்கள்