பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


விரும்பும் மண் பாண்டங்களை வனைவர். அதைப்போல் அவன் நாடு விரும்பியது அளிக்கக் கூடிய வளம் உடையது.

கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ?

வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள், ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக! என மாட மதுரையும் தருகுவன் எல்லாம் பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்! தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த பசு மண் குரூஉத் திரள் போல, அவன் கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே, திணை - பாடாண்திணை, துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

33. சோழன் நலங்கிள்ளி

வேட்டுவர் கொண்டு தரும் மான் இறைச்சிக்கும், ஆயர் மகள் கொண்டு தரும் தயிருக்கும் மாறாக உழவர் மகள் வெண்ணெல் முகந்து கொடுக்கிறாள். அத்தகைய வளம் மிக்க நாடு பாண்டிய நாடு.

அந்த நாட்டின் மீது படை எடுத்துச் சென்று அவற்றின் ஏழு மதில்களைக் கைப்பற்றி அவற்றில் உன் புலிச் சின்னத்தைப் பொறிக்கும் ஆற்றல் உன்பால் உள்ளது.

உன் பாசறைகளில் பாடுநர் உன் வெற்றியைப் பாடுகின்றனர். வீரர்கள் பொலிவுடன் திகழ்கின்றனர். இறைச்சி கலந்த சோற்றினைப் பாணர் சுற்றம் அருந்தி மகிழ அவர்களுக்குத் தருகின்றாய். பெருமை மிக்கு விளங்குகிறது உன் பாசறை இருக்கை.

உன் நகரில் அல்லியம் என்னும் கூத்தை ஆடுவோர் போலக் காதல் கொண்ட காதலன் காதலியர் என்னும் இருவரன்றி இரவில் தனியே எந்த ஆடவனும் நடந்து செல்லாத சோலைகளை உடைய ஒதுக்குத் தெருக்களில் மாடந்தோறும் நீ ஆடுகளை வெட்டிப்