பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

3

பலியிட்டு விழாக்கள் எடுக்கின்றாய். நீ இவ்வாறு ஊரின் கண் எடுக்கும் விழாக்களை விடப் பாசறையில் எடுக்கும் விழாக்களே மிகுதியாகும்.

கருச்

கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய, ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், ஏழ் எயிற் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; பாடுநர் வஞ்சி பாடப் படையோர் தாது எரு மறுகின் பாசறை பொலியப் புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த மலரா மாலைப் பந்து கண்டன்ன ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கைவல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்பக் காம இருவர் அல்லது, யாமத்துத் தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின், ஒதுக்குஇன் திணி மணற் புதுப் பூம் பள்ளி வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப, நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே.

திணை - வாகை துறை - அரச வாகை,

அவனை அவர் பாடியது.

34. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

பசுவின் மடியை அறுத்து அதனை மடிவிப்போர், மகளிர் சிதைத்தோர், தாய் தந்தையரைப் புறக்கணிப்பவர்

இவர்களுக்கு எல்லாம் கழுவாய் உண்டு; அவர்கள் தவறுகள் மன்னிக்கப்படும்.