பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

65



35. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

சேர சோழ பாண்டியர் மூவேந்தர் ஆவர். அவர்களுள் பேரரசு எனப் போற்றப்படுவது நினதே யாகும். அவ்வாறே காவிரி பாயும் சோழ நாடே வளம் மிக்க நாடு என்று போற்றப்படுகிறது.

இந்நாட்டு அரசனாகிய உனக்கு ஒன்று கூற விரும்புகிறேன்.

முறை வேண்டுவோர்க்குக் காட்சிக்கு எளியனாக இருந்து அவர்கள் குறைகளைக் கேட்டு உதவுவது உன் கடமையாகும். மழை வேண்டும்போது பெய்தால் அது மிக்க பயன்தருவது ஆகும். அதுபோல முறை வேண்டும்போதே குறை தீர்ப்பது நன்மை தருவதாகும்.

நீ ஏந்திய வெண் கொற்றக்குடை வெய்யிலைத் தடுப்பதற்கு அன்று; குடிகளின் துயர்களைக் களைவதற்கு ஆகும்.

மற்றும் நீ பெறும் போர் வெற்றிகளுக்கு எல்லாம் அடிப்படை உழவர்தம் உழைப்பும், அவர்கள் தரும் வளனும் ஆகும். உழவர்களைக் காத்து ஒம்புதல் உன் கடமை ஆகும்.

மழை பெய்யாது பொய்த்தாலும், நீர் வெள்ளம் அற்றுவிட்டாலும், இயற்கைக்கு மாறாகக் கேடுகள் நிகழ்ந்தாலும் இவ் உலகம் அரசரைத்தான் பழித்துக் கூறும்.

உன்பால் அக்கறை கொள்ளாது பொறுப்பில்லாமல் பேசுவாரது சொற்களைக் கொள்ளாது உழவர்களை மதித்து அவர்களுக்கு நன்மை செய்தால் நாடு வளம் பெறும்; பகைவர்களும் உன் அடிபணிந்து வழி மொழிவர்.

நளி இரு முந்நீர் ஏணி ஆக, வளி இடை வழங்கா வானம் சூடிய மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர், முரசு முழங்கு தானை மூவருள்ளும், அரசு எனப்படுவது நினதே. பெரும! அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும், அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்