பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



தோடு கொள் வேலின் தோற்றம் போல, ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் நாடு எனப்படுவது நினதே அத்தை ஆங்க நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே நினவ கூறுவல் எனவ கேண்மதி!அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே, ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ மாக விசும்பின் நடுவு நின்றாங்கு கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே வருந்திய குடி மறைப்பதுவே, கூர்வேல் வளவ! வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப, களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, வருபடை தாங்கிப் பெயர் புறத்து ஆர்த்துப் பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே; மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்; அது நன்கு அறிந்தனைஆயின், நீயும் நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது, பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக் குடி புறந்தருகுவைஆயின், நின் அடி புறந்தருகுவர் அடங்காதோரே.

திணை - அது துறை - செவியறிவுறுஉ அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடிப் பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.

36. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

பொருநை மணல்மேடுகளில் சிறு பெண்கள் கழங்கு ஆடி

மகிழ்வர்; அந்த மணல்மேடுகள் இன்று சிதைந்து சிதறிக் கிடக்கின்றன.