பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

7


சங்க காலத்தில் அவர்கள் கதைகளை நாடிச் செல்ல

வில்லை; நிகழ்ச்சிகளைத் தெரிவித்தார்கள். அவை சித்திரங்கள்

ஆயின, கவிதைகள் அவற்றுக்கு அழகு தந்தன.

வாழ்க்கை அவர்களுக்கு மூலப்பொருள்; அதிலிருந்து அறியப்பட்ட செய்திகள், கருத்துகள், சிந்தனைகள் அவர்கள் தெரிவித்தவை.

‘இலக்கியம்’ என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக விளங்குகின்றது. உண்மை அதன் உயிர்நாடி, மெய்ம்மை அறிதல் அதன் நாட்டம்; உணர்வு களை மதித்தல் அதன் ஒட்டம் என்பதைக் காட்டுகிறது.

பாடு பொருள் இலக்கியத்துக்கு எதுவாக வேண்டு மானாலும் இருக்கலாம். அவரவர் நேரில் கண்டது, அறிந்தது, உணர்ந்தது இவற்றைக் கூறுவதே உயரிய படைப்பு என்பதற்குப் புறநானூறு சான்று பகருகின்றது.

இதன் செய்திகளை அறிவிப்பதில் அரிய பண்பாட்டுச் செய்திகளை அறிவிக்க முடிகிறது.

திருக்குறளைப்போல வாழ்க்கை விளக்கமாக உள்ள நூல்

இது. இதனை அறிவதற்கு இச்செய்திகள் பயன்படும். இச் சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

- ரா. சீனிவாசன்