பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

71



40. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

நீ பகைவேந்தர் தம் எயில்களை அழித்து அவர்களை வென்று அவர்தம் பொன்முடி கவர்ந்து அதைக் கொண்டு காலுக்குக் கழல் சமைத்துக் கொண்டாய். அத்தகு வீரன் நீ! வலிமை மிக்கவன்.

உன்னை இகழ்பவர் தாழ்வு பெறுவர் போற்றுவார் பொலிவு பெற்றுத் திகழ்வர்; பொன்னும் பொருளும் பெற்று உயர்வர். இத்தகு காட்சி இன்று காண்கிறோம்.

இனிய சொல்லும் காட்சிக்கு எளிமையும் உன்பால் நிலவுவனவாகுக. அதுபோல் என்றும் காண்போமாக.

நீ செழுமைமிக்க நாட்டுக்குத் தலைவன். ஒரு பெண் யானை படுத்து உறங்கும் சிறிய இடம் ஏழு களிறுகளுக்கு உணவு தரும் வயல் வளம் பெற்றுள்ள நாடு உனது.

செல்வ வளம்மிக்க நீ இன்றுபோல் என்றும் சிறப்புடன் வாழ்வாயாக, ஈதல் இசைபட வாழ்தல் உன்பால் நிலவுவதாக.

நீயே, பிறர் ஒம்புறுமற மன்எயில் ஒம்பாது கடந்து அட்டு, அவர் முடி புனைந்த பசும்பொன் நின் அடிபொலியக் கழல் தைஇய வல்லாளனை வயவேந்தே! யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்கப் புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, இன்று கண்டாங்குக் காண்குவம் - என்றும் இன்சொல் எண் பதத்தை ஆகுமதி - பெரும! ஒரு பிடி படியும் சீறிடம் எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே!

திணை - அது துறை - செவியறிவுறுஉ அவனை ஆவுர் மூலங்கிழார் பாடியது.