பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



41. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

போர் வல்வேந்தே! உன் பகை நாட்டவர் தீய நிகழ்ச்சிகளைக் கனவிலும் நனவிலும் காண்கின்றனர். திசை இரு நான்கும் கொள்ளிக் கட்டைகள் எரிகின்றன. மரக்கிளைகள் பற்றி எரிகின்றன; சூரியன் பல இடத்தும் தோற்றம் அளிக்கிறது. அச்சம் தரும் பறவைகள் தம் கடுமையான குரல்களில் கத்துகின்றன. நிலத்திலே மக்களின் பற்கள் தாமாகக் கழன்று விழுகின்றன. எண்ணெய் ஆடுபவராய் விளங்குகின்றனர். பன்றிமீது ஏறிச் சுற்றி வருகின்றனர். தாம் கட்டி இருக்கும் ஆடைகளைக் களைந்து வேறுபடுத்துகின்றனர். இந்நிகழ்ச்சிகளைக் கனவிலும் நனவிலும் கண்டு கலக்கமுற்ற ஆடவர்கள் நீ படை எடுத்து வருவாய் என்று கருதி அச்சம் அடைந்துள்ளனர்.

உயிருக்குப் பாதுகாப்பு இழந்து அந்நாட்டு ஆடவர்கள் தாம் அன்பு காட்டும் இளம் புதல்வர் கண்களை முத்தமிட்டுத் தம் மனைவியர்க்குத் தம் துயரத்தை மறைக்க முயல்கின்றனர்.

நீ எதிர்க்கும் நாடு கலக்கமுற்றிருக்கிறது. கவலை கொண்டவராய் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

காலனும் காலம் பார்க்கும்; பாராது, வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய, வேண்டு இடத்து அடுஉம் வெல் போர்வேந்தே திசை இரு-நான்கும் உற்கம் உற்கவும் பெரு மரத்து, இலை இல்நெடுங் கோடு வற்றல் பற்றவும், வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும், அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும், எயிறு நிலத்து விழவும், எண்ணெய் ஆடவும், களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும், வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும், கனவின் அரியன காணா, நனவில் செருச் செய் முன்ப நின் வரு திறன் நோக்கி, மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர், புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு