பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

73



எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு பெருங் கலக்குற்றன்றால் தானே - காற்றோடு எரி நிகழ்ந்தன்ன செலவின் செரு மிகு வளவ! நிற்சினை.இயோர் நாடே

திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை அவனைக் கோவூர் கிழார் பாடியது.

42. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

ஈகையும் போர் வெற்றியும் உடைய தலைவனே! நின் யானை மலை போலத் தோற்றம் அளிக்கிறது. சேனைகள் கடல் என முழங்குகின்றன. வேல்கள் மின்னலைப்போல் ஒளி விடுகின்றன. பகை அரசர்கள் நடுங்கும் ஆற்றல் உன்பால் உள்ளது. உன்பால் எந்தக் குறையும் காணப்பட்டிலது. எதுவும் புதியது என்று கூற இயலாது. அனைத்தும் உன்பால் நிலைத்து உள்ளவையே.

உன் நாட்டில் புனல் ஒடும் ஒசை கேட்குமேயன்றி வீரர்கள் அடுகளத்தில் படுதோல்வியுற்று முறையிடும் கதறல் ஒசை கேட்பது இல்லை. புலி தன் குட்டியைக் காப்பதுபோலக் குடிமக்களை நீ கருத்தோடு காத்து நன்மை செய்கிறாய்.

வளம் மிக்க நாடு உனது; விளைச்சல் அற்ற வன் புலத்தவர்க்கு உன் நாட்டினர் வாளை மீனையும், ஆமையையும் தருவர். பருகக் கரும்பின் சாறும், சூடிக் கொள்ளக் கருங் குவளைப் பூவும் தருவர்.

மலையில் இருந்து இறங்கிக் கடல்நோக்கிச் செல்லும் ஆறுகள் பலவற்றைப் போல் புலவர்கள் எல்லாம் நின்னை நோக்கி வருகின்றனர். நீயோ கூற்றுவனைப் போல் சினந்து பகைவர் மண்நோக்கிச் செல்கின்றாய். உன் வெற்றிச் சிறப்பை யாம் போற்றுகிறோம்.

ஆனா ஈகை, அடுபோர், அண்ணல் நின் யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை