பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின், புரை தீர்ந்தன்று; அதுபுதுவதோ அன்றே! தண் புனற் பூசல் அல்லது, நொந்து, “களைக, வாழி, வளவ! என்று, நின் முனைதரு பூசல் கனவினும் அறியாது, புலி புறங்காக்கும் குருளை போல, மெலிவுஇல் செங்கோல் நீ புறங்காப்பப் பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர் கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர் படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர் கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை நீர் தரு மகளிர் குற்ற குவளையும், வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும் மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந: மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி, நில வரை இழிதரும் பல்யாறு போலப் புலவர் எல்லாம் நின் நோக்கினரே, நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக் கூற்று வெகுண்டன்ன முன்பொடு, மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே.

திணை - வாகை, துறை - அரச வாகை

அவனை இடைக்காடனார் பாடியது.

43. சோழன் மாவளத்தான்

பருந்தின் பார்வையில் அகப்பட்ட புறவினைக் காத்த சோழன் வழித் தோன்றல் நீ! சோழன் நலங்கிள்ளி புகழ்மிக்க மாமன்னன்; அவன் உடன் பிறந்த தம்பி நீ; மறவர் தலைவன்; வண்மையில் சிறந்தவன்; சிறப்புமிக்க உன்னை யான் கடிந்து பேசவும் நீ எதிர்த்துப் பேசாமல் அடக்கம் காட்டினாய். ‘உன் முன்னோர்கள் பார்ப்பனர்களை இகழ்ந்தது இல்லை; நீ இகழ்ந்து விட்டாய்’ என்று உன்மீது பழி சுமத்தினேன்.

அந்த இழிமொழியை நீ மறுத்துப் பேசாமல் பொறுத்துக் கொண்டாய். இது உன் தகைமையைக் காட்டுகிறது.