பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



44. சோழன் நெடுங்கிள்ளி

யானைகள் தம் பிடிகளுடன் நீரில் படியச் செல்வது இல்லை; நெல் கவளம் உண்பது இல்லை; கம்பத்தில் மோதி அவற்றில் முட்டிக் கொண்டு நிலத்தில் புரள்கின்றன; வருந்தும் யானைகள் இடியென முழங்குகின்றன.

குழந்தைகள் பாலில்லாமல் அலறுகின்றன. மகளிர் பூவில்லாமலும், எண்ணெய் இடாமலும் தலையை முடித்துக் கொள்கின்றனர். வீட்டில் உள்ளவர்கள் குடிக்கவும் நீர் இல்லாமல் வருந்திக் கூவுவர். இவர்கள் எல்லாம் வருந்திக் கிடக்கவும் இங்கு நீ எதிர்க்காமல் இனிது இருப்பது தக்கது அன்று.

படை வலிமை மிக்க அரசன் நீ; அறக்கோட்பாடு அதற்கு மதிப்புத் தருவதாக இருந்தால் இவ்வாட்சி நினது’ என்று வெளிப்படக் கூறிக் கதவுகளைத் திறந்து விடுக; அன்றி நீ வீரத்துக்கு மதிப்புத் தருவதாக இருந்தால் எதிரியைச் சந்தித்துப் போர் செய்யக் கதவுகளைத் திறந்துவிடுக.

இரண்டும் கெட்டநிலையில் கதவுகளை நன்றாக இறுக்கி அடைத்துக் கொண்டு மதில் புறத்து ஒரு மூலையில் ஒடுங்கி இருப்பது நாணத்தக்கது ஆகும்; இழுக்கும் ஆகும்.

இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா, நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ, திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி, நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து, அலமரல் யானை உரும் என முழங்கவும், பால் இல் குழவி அலறவும், மகளிர் பூ இல் வறுந்தலை முடிப்பவும், நீர் இல் வினை புனை நல் இல் இணைகூஉக் கேட்பவும், இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்! அறவைஆயின், நினது எனத் திறத்தல்; மறவைஆயின், போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லையாகத்