பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

77



திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே.

திணையும் துறையும் அவை.

அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

45. சோழன் நெடுங்கிள்ளியும் நலங்கிள்ளியும்

நீவிர் இருவரும் சோழ குல மன்னர்கள். ஒரே குடியில் பிறந்தவர்கள் ஆவீர்.

நீவிர் பனந்தோட்டையோ வேம்பின் மாலையையோ அணிந்தவர் அல்லர். இருவரும் ஆத்தி மாலை அணிந்தவர் ஆவீர்.

நீங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் அது தும்குடிக்கு ஏற் படும் தோல்வியே ஆகும். இருவரும் வெல்வது என்பது இயலாத ஒன்று; அதனால் நீவிர் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டு போரிடுதல் தக்க செயல் அன்று நம்மைப் போன்ற அரசர்கள் இதைக் கேட்டால் அவர்களுக்கு இது பெருமகிழ்வு செய்யும். சோழ அரசர் அழிவது பிற அரசர்களுக்குப் பெருமகிழ்வு தருவது ஆகும். அதனால் பகையை விட்டு நட்பினைக் கொள்வீராக.

இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்: கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன், நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே: ஒருவீர் தோற்பினும், தோற்பது நும் குடியே, இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால் குடிப்பொருள் அன்று, தும் செய்தி: கொடித் தேர் நும் ஓர் அன்ன வேந்தர்க்கு மெய்ம் மலி உவகை செய்யும், இவ் இகலே.

திணை - வஞ்சி; துறை - துணைவஞ்சி.

சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.