பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



46. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

நீயோ புறவின் துயரத்தையும், பிறர் இடுக்கண்கள் பலவற்றையும் தீர்த்த சோழனின் வழியில் வந்தவன்.

இவரோ அறிவைத் துணையாகக் கொண்டு வாழும் புலவர்தம் துன்பம் போக்கியஅரகர் மரபில் வந்தவர்.

இச் சிறுவர்கள் களிறு கண்டு அஞ்சி அழுதவர்கள் இப்பொழுது புதுமை கண்டு வியப்பு உற்றுத் தம் அழுகையை நிறுத்திவிட்டனர். மன்றத்தை மருளப் பார்க்கின்ற புதுவகையான துயரம் இவர்கள்பால் தெரிகிறது.

இவர்கள் நிலைஇது; கேட்டனை இதனை; இனி நீ விரும்பியது செய்க.

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருமகனை; இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித் தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்; களிறு கண்டு அழுஉம் அழா அல் மறந்த புன் தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி, விருந்தின் புன்கணோ உடையர், கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே!

திணையும் துறையும் அவை.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழிக் கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.

- 47. சோழன் நலங்கிள்ளி

புலவர்களாகிய யாம் வள்ளல்களைத் தேடிப் பறவைகளைப் போல் காடுகள் பல கடந்து செல்வோம்; நீண்ட தூரம் என்று தயங்குவது இல்லை.

திருந்தாத நாவினைக் கொண்டு இயன்றவரை பாடிப் பிறர் தருவது பெற்று மகிழ்கிறோம். பெற்றதைக் கொண்டு எம்