பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

79


சுற்றத்தவரும் அருந்தத் தருகிறோம். அவற்றைச் சேர்த்து வைக்காமல் மற்றவர்க்கும் வாரித் தருகிறோம். அரசர்கள் தரும் சிறப்புகளுக்காக வருந்தி வாழும் இப்பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீது நினைத்தது இல்லை.

எம் பகைவர் நாணும்படி நிமிர்ந்து நடப்போம்; அதனோடு அரசர்களாகிய உங்களைப் போல எங்களுக்குத் தலைமையும் உள்ளது.

வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, நெடிய என்னாது சுரம் பல கடந்து வடியா நாவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி, ஒம்பாது உண்டு, கூம்பாது வீசி, வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீது அறிந்தன்றோ? இன்றே; திறப்பட நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி, ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ் மண் ஆள் செல்வம் எய்திய நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தே.

திணையும் துறையும் அவை.

சோழன் நலங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுஞ்கிள்ளி, ஒற்று வந்தான் என்று கொல்லப்புக் குழிக் கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.

48. சேரமான் கோக் கோதை மார்பன்

கோதை மார்பன் அவன் அணிந்துள்ள பூமாலை, அவன் துணைவியர் சூடியுள்ள பூமாலை, உப்பங்கழியில் மலரும் நெய்தற்பூ இவற்றால் கடற்கரைக் கானலே மணம் பெறுகிறது: தேன் நிறைகிறது. அத்தகைய சிறப்பு மிக்கது தொண்டி என்னும் எமது ஊர்; அதனை ஆள்பவன் யாம் மதித்துப் போற்றும் தலைவன் ஆவான்.

வயதில் மூத்த இரவலனே! நீ அவனை எப்பொழுதாவது சென்று கண்டால் போரில் தம் தலைவன் வெற்றிகள் பெறும் போது எல்லாம் அவனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறான் ஒருவன் என்று என்னைப் பற்றி மறவாமல் அவனிடம் கூறுக;