பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

81


50. தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

முரசுக்கு வாரினைக் கொண்டு போர்த்தி மயிற் பீலியும் உழைஞைக் கொடியும் சூட்டிக் குருதிப் பலி இடுவதற்கு முன் அதனை நீராட்டிக் கொணர எடுத்துச் செல்வர். எண்ணெய் நுரை முகந்தது போன்று மெல்லிய பூக்களால் நிரப்பப்பட்டு இருந்தது முரசு கட்டில், அது முரசு கட்டில் என்பதை அறியாமல் அதில் ஏறிப்படுத்த என்னை இருகூறாக வெட்டி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் உயிர்வாழ விட்டதே நீ தமிழை முழுதும் அறிந்து மதிக்கிறாய் என்பதற்கு அறிகுறியாகும்.

அதனோடும் அமையாமல் அருகில் நின்று முழவு போன்ற நின்வலிமை மிக்க தோள்கொண்டு வெண்சாமரம் வீசினாய். இவ்வாறு மதித்துப் பணிவிடை செய்தது எது கருதி இவ் உலகில் புகழ் படைத்தவருக்கே மறுமையில் துறக்கம் வாய்க்கும் என்ற செய்தியைக் கேட்டதாலோ வெற்றி மிகு வேந்தன் நீ; இவ்வாறு செய்தது வியப்பாக உள்ளது.

மாசு அற விசித்த வார்புறு வள்பின் மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார், பொலங் குழை உழிஞையோடு, பொலியச் சூட்டிக் குருதி வேட்கை உரு கெழு முரசம், மண்ணி வாரா அளவை, எண்ணெய் நுரை முகந்தன்ன் மென் பூஞ் சேக்கை அறியாது ஏறிய என்னைத் தெறுவர, இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை அது உம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல், அதனொடும் அமையாது, அணுக வந்து, நின் மதனுடை முழவுத்தோள் ஒச்சித் தண்ணென வீசியோயே, வியலிடம் கமழ, இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவனது உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல்வலம் படு குருசில்! நீ எங்கு இது செயலே? திணை - அது துறை - இயன்மொழி சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய

மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது.