பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


51. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி

வெள்ளப் பெருக்கு மிகுமாயின் அதனைத் தடுத்து நிறுத்த இயலாது; தீ மிகுந்தால் அதில் தப்பிப் பிழைக்க வழி கிடையாது; காற்று மிக்கு வீசினால் அதனைத் தடுத்து நிறுத்த இயலாது. அது போல் வழுதி சினம் கொண்டால் எதிர்த்து நிற்பாரைக் காண

முடியாது.

தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொது என்பதைப் பொறுக்கா தவனாகிப் போரை நடத்தினால் அதற்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவன் வேண்டும் திறைப் பொருள் தந்து அடிபணிந்து வாழ்பவர் நடுக்கம் அற்றனர்.

அவன் நல் ஆதரவு இழந்தவர்கள் அஞ்சி நடுங்கி நாளும் நாளும் செத்துக் கொண்டிருப்பவர் ஆகின்றனர். சிதலை ஆகிய கறையான் எடுக்கும் புற்றில் ஈசல் ஒரு பகல் வாழ்வதே அரிது. அவற்றைப்போல் நிலையற்ற வாழ்வை அவர்கள் அடைவர், அவர்கள் இரங்கத் தக்கவர் ஆவர்.

நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின், மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை; வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு அவற்று ஓர்அன்ன சினப் போர் வழுதி, ‘தண் தமிழ் பொது எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, கொண்டி வேண்டுவன்.ஆயின், கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே, அளியரோ அளியர், அவன் அளி இழந்தோரேநுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த செம் புற்று ஈயல் போல, ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே!

திணை - வாகை துறை - அரச வாகை

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.