பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

83



52. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி

புலி தன் குகையில் இருந்து வெளிப்பட்டு இரைதேடத் தலைகாட்டுமாயின் யார் அதன்முன் நிற்க முடியும்?

அதுபோல நீ போர் செய்யக் கருதி வடபுலம் நோக்கிப் புறப்பட்டால் அவர்கள் நடுங்கி அஞ்சுவர்.

மீன் சுடுகின்ற புகை வயல்களில் உள்ள மருத மரக் கிளையில் படியும் வளம்மிக்க பகைவர் தம் நாடுகள் பாழ்பட்டு அழிவு பெறுகின்றன. கோயில்கள் பூசை இழந்து வெறுமை உறுகின்றன. தூண்களில் உள்ள தெய்வப் படிமைகள் சிதைந்து கீழே விழுந்து கிடக்கின்றன. அப்பாழ் மண்டபங்களில் நரை மூதாளர்கள் சூதாடும் கருவியை இடுவதால் குழிவுகள் உண்டா கின்றன. அவற்றில் காட்டுக் கோழிகள் முட்டைகள் இடுகின்றன. நீ போர் தொடுக்கச் சென்றால் பகைவர் நாடுகள் இவ்வாறு காடுகளாக மாறி அழிவு பெறும். யார் உன்னை எதிர்க்க வல்லார்?

அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனை.இ. முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல், ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்துத் தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு, வட புல மன்னர் வாட அடல் குறித்து, இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி! இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து யார்கொல் அளியர்தாமே? - ஊர்தொறும் மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் பெரு நல் யாணரின் ஒரீஇ இனியே கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப் பலி கண் மாறிய பாழ்படு பொதியில், நரை மூதாளர் நாய் இடக் குழிந்த வல்லின் நல் அகம் நிறையப் பல் பொறிக் கானவாரணம ஈனும காடு ஆகி விளியும் நாடு உடையோரே!

திணையும் துறையும் அவை, அவனை மருதன் இளநாகனார் பாடியது.