பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



53. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

முத்துக்கள் சிதறிக் கிடக்கும் மணல்பாங்கில் மா ங்களின் திண்ணைகளில் பெண்கள் கழங்கு ஆடுவர். அத்தகைய விளங்கில் என்னும் உனக்கு உரிய ஊரினை முற்றுகை இட்டு வளைத்தவர்களை விரட்டி முறியடித்து ஒட்டினாய்.

இவ் வெற்றியை விரித்துக் கூறினால் அதற்கு எல்லையே கிடையாது; தொகுத்துக் கூறினால் முழுவதும் கூறியது ஆகாது. இதனை எம் போன்ற புலவர்கள் எடுத்துக் கூறிச் சிறப்பித்துப் பாட இயலாது.

கபிலன் இன்று இருந்தால் இவ்வெற்றியைச் சிறப்புறப் பாட இயலும். அவன் இன்று இல்லை என்ற குறையை நீ உணர்கிறாய்.

பாடுவது புலவர்களோடு ஒன்றிய தொழில். அதை விட்டு விலக முடியாது. அதனால் யானும் பாடமுயல்வேன்; அதில் வெற்றியும் காண்பேன். கபிலன் இல்லை என்ற அந்தக் குறையைச் சிறப்பித்துப்பாடி யான் நிறைவு செய்வேன்.

முதிர் வார் இப்பி முத்த வார் மணல், கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து, இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற களம் கொள் யானைக், கடு மான், பொறைய!விரிப்பின் அகலும், தொகுப்பின் எஞ்சும்: மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை கைம்முற்றல, நின் புகழே, என்றும்; ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து வாழேம் என்றலும் அரிதே - தாழாது செறுத்த செய்யுட் செய் செந் நாவின், வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன் இன்று உளன்.ஆயின், நன்றுமன் என்ற நின் ஆடு கொள் வரிசைக்கு ஒப்பப் பாடுவல்மன்னால், பகைவரைக் கடப்பே.

திணையும் துறையும் அவை. சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது.