பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

85



54. சேரமான் குட்டுவன் கோதை

சேரமான் குட்டுவன் கோதை அவன் அவையில் புகுவது எம்மைப் போன்ற புலவர்களுக்கு எளிது; அடையாத திறந்த வாயில் அது. அவன் வாரி வழங்குவான்.

அவனை எதிர்த்துப் போர் செய்ய விரும்பினால் பேரரசர் ஆயினும் அணுகுவதற்கு அரிது.

புலிதங்கிய குகைமுன் ஆட்டிடையன் தான் ஒட்டிச் செல்லும் ஆட்டினத்தோடு அருகில் செல்ல அஞ்சுவான். அவனால் செல்ல இயலாது. அதுபோல் பெருநில மன்னர்களும் அவன் நாட்டு மண்ணில் அடியெடுத்து வைக்க அஞ்சுவர். செல்ல அஞ்சுவர்.

எம் கோன் இருந்த கம்பலை மூதூர், உடையோர் போல இடையின்று குறுகிச் செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல் எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே இரவலர்க்கு எண்மை அல்லது - புரவு எதிர்ந்து, வானம் நான, வரையாது, சென்றோர்க்கு ஆனாது ஈயும் கவி கை வண்மைக் கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த நெடுமொழி மன்னர் நினைக்கும்காலைப் பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி, மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன் சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப் புலி துஞ்சு வியன் புலத்தற்றே வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே.

திணையும் துறையும் அவை. சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனாா பாடியது.

55. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் முப்புரம் எறித்த சிவனின் நெற்றிக்கண் மேம்பட்டு உயர்ந்து

விளங்குவதுபோல முப்பெரு மன்னர்களுள் மேம்பட்டு விளங்கும் பேரரசன் நீ! யானை, குதிரை, தேர், காலாள் என்ற நால்வகைப்