பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

103


சொற்பொருள்: மண்ணி- மூழ்கி போர் மடந்தையைப் புணர வருகின்ற கன்னிப் போர் ஆதலால், பனிக்கயம் மண்ணி என்றார். 2. குழை தளிர் கிணை - ஒசையையுடைய பறை. 4. செழியன் - நெடுஞ்செழியன். 5. வம்ப மள்ளர் - நிலையில்லாத மறவர். 6. எஞ்சுவர் கொல் அவருட் சிலர் இறக்கா தொழியவும் கூடுமோ!

80. காணாய் இதனை!

பாடியவர்:சாத்தந்தையார். பாடப்பட்டோன்:சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி, திணை: தும்பை, துறை: எருமை மறம்.

|அரசனானவன், முதுகிட்ட தன் படைக்குப் பின்னே நின்ற எதிரியை எதிர்ப்பது எருமை மறம் ஆம். அத்துறையைச் சார்ந்த செய்யுள் இது. இதனை, மல் வென்றித் துறை"க்கு நச்சினார்க் கினியர் எடுத்துக் காட்டுவர். (புறத். சூ.20. உரை)

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், மைந்துடை மல்லன் மதவலி முருக்கி, ஒருகால் மார்பொதுங்கின்றே; ஒருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே; நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப் 5 பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம - - பசித்துப் பணைமுயலும் யானை போல, இருதலை ஓசிய எற்றிக், களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே!

ஆமூர்க்கண் வலியுடைய மல்லனின் மதவலியை முருக்கி அழித்தான். ஒரு கால் அவன் மார்பிலும், ஒரு கால் அவன் தந்திரங்களைத் தடுத்து அவன் பின்புறமாகவும் அன்று அமைந்து இருந்தது. அவன் ஆற்றலைக்கண்டு மகிழ்ந்தாலும் மகிழாது போனாலும், தித்தன் அந்தக் காட்சியைப் பார்க்கட்டும். பசிகொண்ட யானை எதிர்ப்பட்ட மூங்கில் தண்டினை எளிதே ஒடித்துத் தள்ளுவதைப் போலக், களம்புகுந்த மல்லனைக் கிள்ளி வெல்லும் அந்தக் காட்சியைக் காணட்டும்! .

- சொற்பொருள்: 1. கடுங்கள் அழன்ற கள்; புளிப்பு மிகுதியால்

களிப்புற்றுச் சீறிப்பொங்கும் கள். 3 மார்பு ஒதுங்கின்று மண்டியாக மார்பிலே மடித்து வைத்து. 4. தார் உபாயம். பின் முதுகு, 5. நல்கினும் - கண்டால் உவப்பினும், 7. பணை முயலும் - மூங்கிலைத் தின்றற்கு முயலும், 8. ஒசிய முறிய.