பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

புறநானூறு - மூலமும் உரையும்


81. யார்கொல் அளியர்!

பாடியவர்: சாத்தந்தையார். பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. திணை: வாகை. துறை : அரச ᎧᏂᏗfᎢᎶᏈ)Ꮬ.

(சோழனது இயல்பையும், வென்றிச் சிறப்பையும் கூறுதலால் அரச வாகை ஆயிற்று)

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே, யார்கொல் அளியர் தாமே ஆர்; நார்ச் செறியத் தொடுத்த கண்ணிக்

கவிகை மள்ளன் கைப்பட் டோரே?

கடல் ஆரவாரத்தினும் அவன் படை ஆரவாரம் பெரிது. கார்கால இடிமுழக்கினும் அவனுடைய களிறு பெருமுழக்கஞ் செய்வது. ஆத்தி மாலையும் வழங்குவதற்குக் குவிந்த கையும் உடையவன் அவன். அவ் வீரனின் கையால் வீழ்ந்தவரிலே எவர்தாம் இரக்கத்தக்க நிலையில் உள்ளனர்?

சொற்பொருள்: 2. உருமின் இடியினும், 3. ஆர்கண்ணி

எனக்கூட்டி ஆத்திமாலை என்று கொள்க. அளியர் - இரங்கத் தக்கவர். -

82. ஊசி வேகமும் போர் வேகமும்!

பாடியவர்: சாத்தந்தையார். பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. திணை: வாகை. துறை: அரச ©ᎫᎱᎢ6Ꮘ)ᏧᏠ$.

(அரசனின் இயல்பையும் வென்றியையும் கூறுதலால் அரசவாகை ஆயிற்று. விரைந்து தொழில் முடித்தற்கு ஆசிரியர் கூறும் உவமை மிகமிக நுட்பமானது ஆகும்)

சாறுதலைக் கொண்டெனப், பெண்ணிற் றுற்றெனப், பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக், கட்டில் நிணக்கும் இழிசினன் கையது பேர்ழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ, ஊர்கொள வந்த பொருநனொடு, - 5

ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!

ஊரிலே விழா; அதற்குப் போகவேண்டும். மனைவிக்குப் பேறுகால சமயம்; அவளுக்கும் சென்று உதவவேண்டும். மாலை வேளை, மழை பெய்துகொண்டிருக்கிறது. கட்டிலைக்