பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

புறநானூறு - மூலமும் உரையும்


சொற்பொருள்: 1. யாழொடும் கொள்ளா- யாழோசை போல இன்பமும் செய்யா.3.மழலை-எழுத்து வடிவு பெறாது தோன்றும் இளஞ்சொல். 6. அருளல் மாறு - அருளுதலால்,

93. பெருந்தகை புண்பட்டாய்! பாடியவர்: - ஒளவையார். பாடப்பட்டோன். அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: வாகை. துறை: அரச வாகை,

(பொருது புண்பட்டு நின்றோனாகிய அதியனை, அவனது போர்வென்றியைப் போற்றுவது மூலம் பாராட்டிக் கூறிய செய்யுள் இது. அடுத்துார்ந்து அட்ட கொற்றம் என்னும் வஞ்சித் திணைத் துறைக்கு மேற்கோள் காட்டுவர் இளம்பூரணர் (தொல். புறத். சூ.7)

திண்பிணி முரசம் இழுமென முழங்கச் சென்று, அமர் கடத்தல் யாவது? வந்தோர் தார்தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு, ஒடல் மரீஇய பீடுஇல் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக், 5

காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி, மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வழிச் செல்க' என 10

வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ, வரிDமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து அண்ணல் யானை அடுகளத் தொழிய, அருஞ்சமம் ததைய நூறி, நீ - பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே. 15 பெருந்தகையோனே! போரிலே நீ விழுமிய புண்பட்டு விட்டாய். நின்னை எதிர்த்தோர் நின்னால் போரிலே வீழ்ந்து தம் இழிதகவு பிழைத்துப் பெருமையுற்றனர்.வண்டுமொய்க்கும் மதநீர் உடைய போர்யானைகளையும் சிதற வெட்டி வீழ்த்தும் வலிமை உடையவனே! இனி, முரசும் முழங்கச் சென்று, நின்னை எவர்தாம் போரில் வெல்லப் போகின்றனர்? நின்னை எதிர்ப்பார்தாம் எவரும்

இலரே!

சொற்பொருள்: 4. ஒடல் மரீஇய - போதலிலே மருவிய 8. பசும்புல் - பசுமையான தருப்பைப் புல், 9. கந்து ஆக பற்றுக் கோடாக 1. வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் - வாளோச்சி