பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

புறநானூறு - மூலமும் உரையும்



. 109. மூவேந்தர்முன் கபிலர்!

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: நொச்சி. துறை: மகண் மறுத்தல்.

("தாளிற் கொள்ளலிர், வாளிற் றாரலன்’ எனப் பகை வேந்தரது கருத்துக்கு எதிராகத் தம் மகளைத் தர மறுத்துச் சொல்லுதலால், மகண் மறுத்தல் ஆயிற்று. உழிஞைத் திணைத் துறைகளுள் ஒன்றாகிய, "அகத்தோன் செல்வம்' என்பதற்கு இளம்பூரணர் எடுத்துக்காட்டுவர்)

அளிதோ தானே, பாரியது பறம்பே' நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும், உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே; ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே; இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே; 5

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே, நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து, திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே; வான்கண் அற்று, அவன் மலையே; வானத்து மீன்கண் அற்று, அதன் சுனையே, ஆங்கு, 1 O

மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், தாளின் கொள்ளலிர், வாளின் தாரலன்; யான்அறி குவென்; அது கொள்ளும் ஆறே - சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, 15 விரையொலி கூந்தல் விறலியர் பின்வர, ஆடினிர் பாடினிர் செலினே, நாடும் குன்றும் ஒருங்கு யும்மே. மூங்கில்நெல்லும், பலாப்பழமும்,வள்ளிக்கிழங்கும்,தேனும் ஆகிய நான்கு விளைவுகள் உழவின்றியே கிடைப்பது பறம்பு நாடு. வானளாவிய உயரமும், அகலமும் உடையது அது. மலையின் சுனைகள் வான்மீன் போன்று எண்ணற்று விளங்கும். ஆகவே, மரத்துக்கு ஒரு யானை வீதம் நீவிர் கட்டியிருந்தீராயினும், இருக்கும் இடமெங்கும் தேரால் நிறைத்திருந்தீராயினும், பாரியை வெல்லல் நும்மால் இயலாது. பாரியின் பறம்பு பகைவர்க்கு எளிதன்று. முரசு விளங்கும் நீவிர் மூவரும் கூடினும் அவனை வென்றிகொள்ளலும் ஆகாது. வாளால் அவனை வெல்லலே இயலாது. அவன் நாட்டை அடைவது எவ்வாறெனில், பாடிப் பரிசில் பெறும் பரிசிலர் போல, யாழிசையுடன் விறலியர் சூழ