பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lyoōlyiţă Gśćìš6ìr 131

வாக்க உக்க தேக்கள் தேறல் கல்அலைத்து ஒழுகும் மன்னே! பல்வேல், அண்ணல் யானை, வேந்தர்க்கு இன்னான் ஆகிய இனியோன் குன்றே! ஒரு பக்கத்திலே அருவில் ஒலியோடு வழியும்; மற்றொரு பக்கத்திலே பாணர் ஏந்திய கலங்கள் மதுவால் நிரம்பி வழியும்; வடிக்கச் சிந்தின தேறல் கல்லையும் உருட்டி ஓடிவரும்; எல்லாம், பறம்பில் அந்நாள் நிகழக் கண்டேன். வேற்படையும் யானைப் படையும் உடைய வேந்தர்க்கு இன்னானாய், எமக்கு இனியோனான, அந்தப் புகழ்மிக்க பாரியின் பெருமலையே! அந்தோ! நீ என் கண்பார்வையினின்றும் இப்போது நீ கழிந்து போகின்றனையே!

சொற்பொருள்: 2. பெய்ம்மார் - வார்க்க வேண்டி வார்க்க - வடிக்க (வடிகட்ட), 3. உக்க - சிந்திய தேக்கள் தேறல் - இனிய கள்ளாகிய தேறல், 4. கல் அலைத்து கல்லை உருட்டி மன் - அது கழிந்தது. 6 இன்னான் ஆகிய கொடியோன் ஆகிய இனியோன் - இனியனாகிய பாரியது.

116. குதிரையும் உப்புவண்டியும்! பாடியவர்: கபிலர் திணை: பொதுவியல் துறை: கையறு நிலை. - - ("நோகோ யானே தேய்கமா காலை என்னுஞ் சொற்களால், கபிலர் கொண்ட வேதனை மிகுதி விளங்கும். 'வலம்படு தானை வேந்தர் பாரியது அருமை அறியார் என்பதும் சிந்திக்க) -

தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல், ஏந்தெழில் மழைக்கண், இன்நகை, மகளிர் புன்மூசு கவலைய முள்முடை வேலிப், - பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், 5 பீரை நாறிய சுரை இவர் மருங்கின் ஈத்திலைக் குப்பை ஏறி உமணர் உப்பு ஒய் ஒழுகை எண்ணுபமாதோ, நோகோ யானே! தேய்கமா காலை! r பயில்பூஞ்சோலை மயில் எழுந்து ஆலவும், 1 O பயில் இருஞ் சிலம்பிற் கலைபாய்ந்து உகளவும், கலையுங் கொள்ளா வாகப், பலவும்