பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

புறநானூறு - மூலமும் உரையும்


ஆராய்ச்சி விரிவு, ஆற்றல், ஆட்சித் திறன், அருள் ஆகியவற்றிலே ஐம்பெரும் பூதங்களான நிலனையும் வானையும் காற்றையும் நெருப்பையும் நீரையும் முறையே ஒப்பவன் அவன். பால் புளித்தாலும், ஞாயிறு இருண்டாலும், மறைநெறி திரிவுற்றுப் பிறழ்ந்தாலும், கடமையினின்றும் சற்றும் பிறழாதவர் அவன், மந்திரச் சுற்றத்தினர். அவனைப், 'பொருந! வான வரம்ப! பெரும!' ' என விளித்து, “உயர்வால் இமயமும், புகழால் தமிழ் வளர்த்த பொதியமும் போன்று நீ நெடிது வாழ்வாயாக!" என வாழ்த்துகின்றார் புலவர். சொற்பொருள்: 1. திணிந்த - செறிந்த. 2. ஏந்திய - தாங்கிய. 4. தலை இய - தலைப்பட்ட. 7. போற்றார் - பகைவர், சூழ்ச்சி - ஆராய்ச்சி. அகலம் - விரிவு. 9. தெறல் - செருக்கு அடக்கல். அளி - அருள்.1}. யாணர் வைப்பின் - புது வருவாய் பொருந்திய ஊர்களை உடைய. 13. அலங்கு உளை - அசையும் பிடரி மயிரை உடைய. 14. தலைக்கொண்ட - தம்பாற் கொண்ட பொலம் - பொன். 16. மிகு பதம் - மிக்க உணவு. 19. சுற்றம் - மந்திரச் சுற்றம்; அமைச்சர், படைத்தலைவர் ஆகியோர். 10. அடுக்கத்து - மலைச்சரிவின் கண். 21. நவ்வி - மான் கன்று, பிணை- பெண்மான். 24. கோடு - மலை உச்சி, துஞ்சம் - உறங்கும். 3. வன்மையும் வண்மையும்! பாடியவர்: இரும்பிடர்த் தலையார். பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி. திணை: பாடாண். துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம். சிறப்பு: இரும்பிடர்த் தலையாரைப் பற்றிய செய்தி. ('மக்களுள் பெண்பாலைப் பாடுதல் சிறப்பன்று; சிறுபான்மை ஆண்மக்களோடு படுத்துப் பாடுவர் சான்றோர். 'செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ' என வருதல் அதற்குச் சான்று. ‘நிலம் பெயரினும் நின் சொற் பெயரல்' என்றதனால், செவியறிவுறூஉ ஆயிற்று. ‘நினது ஆணையாகிய சொல் பிறழாது ஒழியல் வேண்டும்' எனப் பொருள் கொண்டால், இதுவே வாழ்த்தியலாக அமையும். ‘பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து' எனப் பாடியோர் பெயரும், ‘கருங்கை ஒள்வாட் 'பெரும்பெயர் வழுதி' எனப் பாடப் பட்டோன் பெயரும் செய்யுளுள் வந்தமை காண்க.) - உவவுமதி உருவின் ஓங்கல் வெண் குடை நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற ஏம முரசம் இழுமென முழங்க,