பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

புறநானூறு - மூலமும் உரையும்



“நின்னது தா என, நிலை தளர,

மரம் பிறங்கிய நளிச் சிலம்பின்,

குரங் கன்னபுன் குறுங் கூளியர் பரந் தலைக்கும் பகைஒன்றென்கோ? 'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்' 15

எனக் கருதிப் பெயர் ஏத்தி,

வாயாரநின் இசை நம்பிச்,

சுடர் சுட்ட சுரத்து ஏறி,

இவண் வந்த பெரு நசையேம்;

'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்; 2O

பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப வென அனைத் துரைத்தனன் யான் ஆக,

நினக்கு ஒத்தது நீ நாடி,

நல்கினை விடுமதி, பரிசில் அல்கலும், தண்புனல் வாயில் துறையூர் முன்றுரை 25

நுண்பல மணலினும் ஏத்தி, உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே.

‘ஆய் வேளே! நின் புகழையே நம்பினேம். சுடர் சுட்டு வருத்தும் கானலையுங் கடந்து, பெருவிருப்புடன் நின்னை நாடி வந்தோம். ஈரும் பேனும் நிறைந்த பிணிபட்ட எம் தலையின் பேன் பகை ஒன்றுமோ? உண்ணாது ஊன் வாடிக் கண்ணிர் மல்கிக் கசிந்து பெருகும் மெலிந்த எம் கிளையோடும் வருந்தும் பசிப் பகை ஒன்றுமோ? அஃதன்றியும், மலை வழியில், நும்மிடம் உள்ளதும் எம்மிடம் தருவீர்?’ எனப் பறித்துச் செல்வரே கள்வர்; அவர் பகை ஒன்றுமோ? எப்பகையாயினும் அறிந்து, அவற்றைப் போக்குபவன் நீ ஒருவனே என்றுதான் நின்பால் வந்தோம். எமக்கு ஈத்து உதவுவதே உண்மையான ஈகையாகும். யாம், எம் நிலைபற்றிச் சொல்வதைச் சொன்னோம். நீயோ நின் தகுதிக்கு ஏற்பப் பரிசில் தந்து எம்மை அனுப்புவாயாக பெருமானே! நீ தரும் செல்வத்தைத் ‘துறையூர்த் துறை முன்னர்க் காணும் நுண் மணலினும் பல்லாண்டு வாழ்க’ என வாழ்த்தி, யாம் உண்டு வாழ்வோம்.

சொற்பொருள்: 1. பத்தர் - யாழின் ஓர் உறுப்பு. 2. வலந்த சூழ்ந்த துன்னத்து - தையவிடத்து. 3. இடைப் புரைபற்றி - இடைக்கண் உளவாகிய புண்களைப் பற்றி. பிணிவிடா - ஒன்றோடொன்று தொடர்ந்த பிணிப்பு விடாதே. 4. ஈர்க்குழாத் தொடு - கிடக்கின்றன. ஈரினது திரளோடு. ஈர் - பேனின் முட்டை 8. கசிவுற்ற - வியர்ப்பு உற்ற.10. அறிந்தீயார் - அறியாரால், 23 நாடி -