பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

புலியூர்க்கேசிகன் - 151

ஆராய்ந்து. 24. நல்கினை விடுமதி - தந்தனையாய் விடுதியாக, அல்கலும் - நாடோறும்:25. முன்றுறை - துறை முன்னர். - 137. நின் பெற்றோரும் வாழ்க!

பாடியவர்: ஒருசிறைப் பெரியனார். பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன். திணை: பாடாண். துறை: இயன் மொழி, பரிசில் துறையும ஆம.

(அரசனது இயல்பைக் கூறுதலின், இயன் மொழி ஆயிற்JD1. 'நீ வாழியர், நின் தந்தை தாய் வாழியர் என வாழ்த்துதல் பரிசிற் குறிப்பாக ஆதலின், பரிசில் துறையும் ஆம்) . .

இரங்கு முரசின், இனம் சால் யானை, میسر

முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை

இன்னும் ஓர் யான் அவாஅறியேனே,

நீயே, முன்யான் அறியு மோனே! துவன்றிய

கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது, 5

கழைக் கரும்பின், ஒலிக்குந்து, - -

கொண்டல் கொண்டநீர்கோடைகாயினும்,

கண்ணன்ன மலர்பூக் குந்து,

கருங்கால் வ்ேங்கை மலரின் நாளும்

பொன்னன்ன வீசுமந்து, 10

மணியன்னநீர் கடற் படரும்;

செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!

சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை!

நீவாழியர் நின் தந்தை

தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே! 15

நீர்வளமும் நிலவளமும் மிகுந்த நாஞ்சில் மலைக்கு

உரியோனான பொருனனே! சிற்றருவி பல உடைய பெருமலைக்கு

உரியவனே! யான் ஒருவனே மூவேந்தரைப் பாடும் அவாவை இன்னமும் அறியாதவன். யான் முன்னர்த் தொடங்கி அறிந்தவன் நீ ஒருவனே! நீ வாழ்க! நின்னைப் பெற்றோரான நின் தந்தை தாயரும் வாழ்க! -

சொற்பொருள்: 1. இனஞ்சால் - இனம் அமைந்த 2 ஏணி - எல்லை. 3, ஒர் யான் - யான் ஒருவனே. அவா அறியேன் - பாடும் அவாவை அறியேன்.4, முன் யான் அறியுமோனே நீதான் முன்னே தொடங்கி யான் அறியுமவன். துவன்றிய நீர் நிறைந்த 5. கயத்து இட்ட - பள்ளத்தின்கண் விதைத்த. வறத்திற் சாவாது - நீர் இன்மையாற் சாவாது. வறம் - வறட்சி. 6. கழை கரும்புபோல.