பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

புறநானூறு - மூலமும் உரையும்


ஒலிக்குந்து தழைக்கும். 7. கொண்டல் - மழையால் முகந்து சொரியப்பட்ட 8. பூக்குந்து - பூக்கும்.

138. நின்னை அறிந்தவர் யாரோ?

பாடியவர்: மருதன் இளநாகனார். பாடப்பட்டோன். ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: பாணாற்றுப் படை

(பாணனை ஆயிடத்துச் செல்க எனக் கூறி ஆற்றுப்படுத்தலின், பாணாற்றுப்படை ஆயிற்று. அவன் தப்பாமற் பரிசில் தருவான் என்பதனை உணர்த்துவார், 'நின் இறை' என்றனர்) -

ஆணினம் கலித்த அதர்பல கடந்து, மானினம் கலித்த மலையின் ஒழிய, மீனினம் கலித்த துறைபல நீந்தி, உள்ளி வந்த, வள்ளுயிர்ச் சீறியாழ், சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண! 5 நீயே, பேரெண் ணலையே; நின்இறை, 'மாறிவா என மொழியலன் மாதோ, ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன் கிளி மரீஇய வியன் புனத்து மரன்அணி பெருங்குரல் அனையன் ஆதலின், 10 நின்னை வருதல் அறிந்தனர் யாரே!

வழிபல கடந்து வரும் முதிய பாணனே! சிறிய யாழும் கந்தல் உடையுமாகக் காணப்படுவோனே! அவனை எண்ணி வந்த நீ பெரிய எண்ணம் கொண்டவன். நின் தலைவன், பின்னொரு நாள் வா’ என்று சொல்லாதவன். கருங்கூந்தல் ஆயிழையின் கணவன். அகன்ற புனத்தில் வாழும் கிளி, மரப் பொந்திலே சேர்த்துவைத்த பெரிய கதிரைப் போன்றவன். அவனிடம் பரிசில் பெற்று வரும்போது, நின்னைப் பழைய பாணன் என்று எவர்தாம் அறிவார்? அத்துணை வளமுடன், நின் தோற்றமே மாறிவிடுமே!

சொற்பொருள்: 1. ஆணினம் கலித்த அதர் - பெற்றத் தினது இனமிக்க வழி. 2. மான் இனம் கலித்த - மான் திரள் மிக்க, 3. மீன் இனம் கலித்த - மீனினம் தழைத்த, 4. வள்ளுயிர்ச் சீறி யாழ் - வள்ளிய ஓசையை யுடையதாகிய சிறிய வாழ். 5. முதாஅரிப்பாண - முதிய பாணனே. 6. நீ பேரெண்ணலை - நீதான் அவன்பாற் சில கருதிப் போகின்றமையின் பெரிய எண்ணத்தையுடையை. 7. மாறி வா என - இப்பொழுது போய்ப் பின்னொரு நாள் பரிசிற்கு வர் என்று. 8. வியன் புனத்து - அகன்ற புனத்தின்கண். 9. மரன் அணி பெருங்குரல் அனையன் - மரப் பொதும்பின் கண்வைத்த பெரிய கதிரை யொப்பவன்.