பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

163


வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச் செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன், தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை, கான்அதர் மயங்கிய இளையர் வல்லே, 10 தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத் தான்ஞெலி தீயின் விரைவணன் சுட்டு, நின் இரும்பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின், அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி, நல்மரன் நளிய நறுந்தண் சாரல், r 15

கல்மிசை அருவி தண்ணெனப் பருகி, விடுத்தல் தொடங்கினேன் ஆக, வல்லே, "பொறுத்தற் கரிய வீறுசால் நன்கலம் பிறிதொன்று இல்லை; காட்டு நாட்டேம்" என; மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம் 20

மடைசெறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்; 'எந்நாடோ என, நாடும் சொல்லான்! 'யாரீ ரோ! எனப், பேரும் சொல்லான்; பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே; 'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி 25 அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின் பளிங்கு வகுத் தன்ன தீநீர்; நளிமலை நாடன் நள்ளி அவன் எனவே. குளிர்காலத்துப் பருந்தின் சிறகைப் போன்ற சிதைந்த ஆடையுடன், பிற நாடெல்லாஞ் சுற்றியும் தீராத வருத்தமும் உலைவும் கொண்டவனாக, என்னையும் மறந்து, ஒரு பலா மரத்தடியிலே இருந்தேன். அதுபோழ்து, தான் வேட்டையாடிய மானுடன் வந்தனன், செல்வத் தோன்றலான, வலிய வில்லாளனான வேட்டுவன் ஒருவன். அவனை வணங்கி எழ முயன்றேனைக், கைகுவித்து அவன் இருத்தினான். அதனுடன் மானின் நெய்யிழுது போன்ற தசையைச் சுட்டுத், தின்னுக’ என்றனன். அதனை உண்டு யானும் என் சுற்றமும் பசி நெருப்பு அவிய இருந்தேம். அருவி நீர் குடித்துப் பின் அவனிடம் விடைபெறவும் தொடங்கினேம்.அவனோ, “காட்டிலிருக்கின்றேம்: நுமக்குத் தர வேறோர் சிறந்த பொருளும் எம்மிடம் இல்லையே!” எனச் சொல்லியவனாகத், தன் மார்பின் முத்து ஆரத்தையும், கையிற் கடகத்தையும் எடுத்துத் தந்தனன். நீர் யார்? நும் நாடு