பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

புறநானூறு - மூலமும் உரையும்


பிழையாத அவர் தறுகண்மை - இவற்றையுங் காண்பர். அதனை அடுத்து, அம்புபட்டு வீழ்ந்தவர் உடலினைக் கற்குவியல்கள் மூடியிருக்க, அதனருகே உன்னமரத்தின் மீது கழுகுகள் அமர்ந்து உணவினை இழந்ததற்கு வருந்தியிருக்கும் காட்சியையும் காண்பர். எவரும் வருவதற்கு எண்ணாத அவ் வழியினுடுநின்னைக் காணும் விருப்பினாலேயே இரவலர் வருகின்றனர்!

அவர் மனக் குறிப்பை முகத் தோற்றத்தாலேயே கண்டு உணர்ந்து, அவரது வறுமையைத் தீர்க்கும் நின் வள்ளன்மை யால்தான், இவ்வாறு அவர் நின்னைத் தேடி வருகின்றனர்! (அச்சந்தரும் ஆற்றல் உடையவன்பால், அச்சந்தரும் வழியையும் பொருளாக்காது இரவலர் கடந்து வருவர் என்றது, வழுதியின் வள்ளன்மைச் சிறப்பையும் தகுதியையும் காட்டுவதற்காகும்.)

சொற்பொருள்: 1. உவவுமதி - முழு நிலவு ஓங்கல் வெண்குடை - உயர்ந்த வெண்கொற்றக் குடை, 2. நிலவுக் கடல் வரைப்பின் என்றது, கடல் எல்லையாகிய தென்னெல்லையின் வேந்தர் பாண்டியர் என்பதற்கு 4. நேமி - ஆட்சிச் சக்கரம். நேஎ நெஞ்சு - ஈரமுள்ள நெஞ்சு 6 செயிர்தீர் - குற்றமற்ற.7, புகர் - புள்ளி, 8.கடா அம்-மணமுள்ளது; மதநீர்.12.மருந்தில் கூற்றம்-தடுத்து உயிர்வாழ இயலாது கொல்லும் கூற்றம் 13. கருங்கை - வன்மை உடைய கை 15. பொலங்கழல் - பொற்கழல். 17. விலங்ககன்ற வியன் மார்பு - ஊடாக அகன்றும், முன்னாகப் பரந்தும் விளங்கும் மார்பு. 19. பார்வல் - பார்த்தல். 20. பதுக்கை - கற்குவியல். 21. உன்னம் - வன்மையான ஒருவகை மரம். 24. துன்னருங் கவலை அணுகுதற்கரிய கவறுபட்ட பாதை 25. நசை - விருப்பம்.

4. தாயற்ற குழந்தை! - பாடியவர்: பரணர். பாடப்பட்டோன்: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி. திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை. சிறப்பு: சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வென்றி மேம்பாடும்.

('செஞ்ஞாயிற்றுக் கவினை என்பதுவரை சோழனின் புகழைக் கூறி, ஒயாது கூவும் நின் உடற்றியோர் நாடு’ எனப் பகைவரது நாடழிபு இரங்கலும் சொல்லினர். இதனால் இது "கொற்ற வள்ளை ஆயிற்று. 'தாயில் தூவாக் குழவிபோல ஒயாது கூஉம் நின் உடற்றியோர் நாடு (19 - 20) என்னும் உவமை செறிவுடையது. 'ஈன்றோர் நீத்த குழவிபோல'(புறம் 230) : 'தாயில் தூவாக் குழவிபோல (புறம் 379) தாயொழி குழவிபோலக் கூஉம் (மணி 13:1; 95; 10) எனப் பிறரும் இதனை எடுத்தாளுவர்)