பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

175


“பசியால் வற்றி உலர்ந்த குடர் குளிருமாறு நெய்யுடைய அடிசிலைக், கொழுவிய துவையுடன், பாடி வருவார் சுற்றத்திற்கு ஊட்டுவதுடன், பொன்னாற் செய்த ஆபரணங்களையும் வழங்குபவன், பெறுதற்கரிய நண்பரினும் என்பால் பெரு நட்புப் பாராட்டிய நல்ல புகழையுடையவன்; அவனே குமணன்! அவன் மது நிறைந்த தெருக்களையுடைய முதிர மலைத் தலைவன். நீயும் அவன்பாற் செல்க. நினக்கு மிகவும் தருவான்” எனப் பலரும் சொல்லக் கேட்டேன். நின்னை நாடியும் வந்தேன். என் வீட்டிலோ சோறில்லை. என் புதல்வன், தாயின் பாலற்ற தனத்தைப் பசியால் சுவைத்துச் சுவைத்துப் பால்பெறானாகச், சோற்றுப்பானையைத் திறந்து அங்கும் எதுவுங் காணானாக அழுவான். புலிவரவு சொல்லி அச்சுறுத்தியும், அம்புலி காட்டியும் அவன் தணியாது போக வருந்திய அவள், நின் தந்தையை நீ எப்படி வெறுப்பாய் காட்டு’ எனக் கேட்க, அவனும் முகஞ்சுளித்துக் காட்ட, அது கண்டு உண்மையிலேயே வருந்துபவளாயினாள் என் இல்லாள். அவள் வளம் பெறுமாறு, விரைந்து பரிசில் தந்து அனுப்புதலை விரும்புகின்றேன். அவ்வாறு அனுப்பினால், நினது சீர் மிகுந்த புகழ் உலகின் எல்லைவரை பரவி உயர்வடையுமாறு நின்னையான் வாழ்த்துவேன், பெருமானே!

சொற்பொருள்: 6. குளிப்ப-தன்கண்ணே மூழ்கும் பரிசு குளிர. 7. குய்கொள் - தாளிப்புச் சேரப்பட்ட 8. நவின்ற - பயின்ற. 9. சுற்றஇரீஇ சூழவைத்து இருத்தி ஊட்டி 21 உள்இல் வறுங்கலம் - உள் ஒன்றில்லாத வறிய அடுகலத்தை 24 பொடிந்த நின் செவ்வி - வெறுத்த நின் செவ்வியை. 27. செல்லாச் செல்வம் - தொலையாத செல்வம்.

161. பின் நின்று துரத்தும்! பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன். குமணன்.

திணை: பாடாண். துறை: பரிசில். குறிப்பு: பாடிப் பகடு பெற்றது. (பரிசில் பெற்று அரசனைப் பாடிப் போற்றியது)

நீண்டொலி அழுவம் குறைபட முகந்துகொண்டு; ஈண்டுசெலல் கொண்மூவேண்டுவயின் குழீஇப் பெருமலை யன்ன தோன்றல சூன்முதிர்பு, - உரும்உரறு கருவியொடு, பெயல்கடன் இறுத்து, வளமழை மாறிய என்றுழ்க் காலை, - - 5

மன்பதை யெல்லாம் சென்றுணக், கங்கைக்

கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு, எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்,