பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

187


172. பகைவரும் வாழ்க!

பாடியவர்: வடமண்ணக்கன் தாமோதரனார். பாடப் பட்டோன்: பிட்டங் கொற்றன். திணை: பாடாண். துறை:

இயன்மொழி.

(தலைவனது கொடை இயல்பை மிகுத்துக்கூறிப் போற்று கின்றனர். மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே')என்றது, அவர் வாழார் என்பது புலப்பட உரைத்ததாகும்)

ஏற்றுக உலையே; ஆக்குக சோறே, கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக; அன்னவை பலவும் செய்க, என்னது உம் பரியல் வெண்டா வருபதம் நாடி, - 5 ஐவனங் காவல் பெய்தீ நந்தின் ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும் வன்புல நாடன், வயமான் பிட்டன்: ஆரமர் கடக்கும் வேலும், அவன் இறை மாவள் ஈகைக் கோதையும், 10

மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே'

பிட்டனுடைய வெற்றிவேலும், அவனுடைய தலைவனான கோதையும், அவனோடு பகைத்த மன்னரும், நீண்ட காலம் வாழ்வாராக! இனிமேல் வரும் உணவை நாடி எதுவும் செய்தல் வேண்டா, அவன் வழங்கியதே போதுமானது. ஆதலால், உலை ஏற்றுக, சோறாக்குக; கள்ளும் குறைவு படாது நிறைத்துக் காக்க, விறலியர் கோதை புனைக பிறவு மெல்லாம் செய்து மகிழ்வீராக!

சொற்பொருள்: 2. கள்ளும் குறைபடல் ஒம்புக - மதுவையும் நிறைய உண்டாக்குக. 3. கோதையும் புனைக - மாலையும் சூடுக. 4. என்னது உம் பரியல் வேண்டா - சிறிதும் இரங்குதல் வேண்டா. 5. வருபதம் - மேல்வரக் கடவ உணவை. 6. ஐவனம் காவலர் - ஐவன நெல்லைக் காப்பாளர். பெய்தி நந்தின் - காவற்கு இடப்பட்ட தீ அவ்விடத்துக் கெட்ட காலத்து. 7. மணி - மாணிக்கம். 8 நாடன் - மலைநாட்டை யுடையவன். வயமான் - வலிய குதிரையை உடைய. 10. மாவள் ஈகைக் கோதையும் - அவன் தலைவனாகிய பெரிய வள்ளிய கொடையையுடைய கோதையும்; கோதை - சேரமான்.