பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

புறநானூறு - மூலமும் உரையும்


173. யான் வாழுநாள் வாழிய!

பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். பாடப்பட்டோன். சிறுகுடி கிழான் பண்ணன். திணை: பாடாண். துறை: இயன்மொழி.

(பசிப்பிணி மருத்துவனாகிய பண்ணனது இயல்பை மிகை படக் கூறிப் பாராட்டுகின்றான் மன்னன்)

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் காண்க, இவன் கடும்பினது இடும்பை, யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன ஊணொலி அரவந் தானும் கேட்கும்; பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி - 5

முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச், சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும், - மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப் 10 பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ? கூறுமின், எமக்கே.

‘பாணரே! இந்த இரவலனது சுற்றத்தாரின் வறுமையைக் காணுங்கள். பழ மரத்திலே பறவையினம் ஒலித்தாற்போல ஊண் உண்பார் ஆரவாரம் கேட்கும். எறும்புகள் முட்டைகளைக் கொண்டு மேட்டுநிலத்தை நோக்கிப் போகின்றது போலப் பெரிய சுற்றத்தோடுங் கூடிய பிள்ளைகள், கையிலே சோறு பெற்றுக்கொண்டு போவதைக் காண்போம். பசியும், வழிநடை வருத்தமும் வாட்டுகின்றன. அவை கண்டும் கேட்டும் தெளியவும் பசிநோய் தீர்க்கும் மருத்துவன் இல்லம் பக்கமோ தூரமோ என்று உங்களைக் கேட்கின்றோம்; சொல்லுங்கள். அப் பண்ணன்' இவ்வுலகிலே நெடுங்காலம் வாழ்வானாக!

சொற்பொருள்: 4. ஊண்ஒலி அரவம் தானும் கேட்கும் - ஊணாலுண்டாகிய ஆரவாரம் தானும் கேட்கும். 5. பொய்யா எழிலி - காலம் தப்பாத மழை பெய்விடம் நோக்கி - பெய்யும் காலத்தைப் பார்த்து. 6. வற்புலம் சேரும் - மேட்டு நிலத்தினை யடையும். 7. சில்லொழுக்கு ஏய்ப்ப - சிலவாகிய ஒழுக்கத்தை யொப்ப. 8. வீறுவீறு இயங்கும் வேறு வேறு போகின்றி. 9. இருங்கிளைச் சிறாஅர் - பெரிய சுற்றத்தோடும் கூடிய பிள்ளைகள். காண்டும் - காண்பேம். -