பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

μωμπάααθεά 195

போரிலே படைத்துணையாக உதவியும், அமைச்சாக அறிவுரை உதவியும் சிறந்தவன்; ஆண்மையும் சூழ்ச்சித்திறனும் ஊக்கமும் புகழும் உடையவன்; பருந்தின் பசி தீர்க்கப் பகைவரை அழித்துப் போரிட்டுப் போரிலே வெற்றிகொள்ளும் நாலைகிழவன் நாகன் உளன் என்றனர்.பலரும். அதனால், யாமும் நின்பால் வந்தனம்; எனக்கும் உதவுக பெருமானே! . .

சொற்பொருள்: 5. திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன் - திருமகள் விரும்பிய நுண்ணிய தொழில் பொருந்திய ஆபரணத்தையுடைய பாண்டியன் மறவன். 6. வாள் உதவியும் - வாட்போரை யுதவியும். வினை வேண்டுவழி அறிவு உதவியும் - அரசியற்கேற்ற கருமச்சூழ்ச்சி வேண்டியவிடத்து அமைச்சிய லோடு நின்று அறிவுரை பல உதவியும்.

180. நீயும் வம்மோ!

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார். பாடப்பட்டோன்: ஈர்ந்துர் கிழான் தோயன் மாறன். திணை: வாகை. துறை: வல்லாண்முல்லை; பாணாற்றுப் படையும் ஆம்.

(அவனது வல்லாண்மையைக் கூறுதலுடன், "நீயும் வம்மோ முதுவாய் இரவல' என ஆற்றுப்படுத்தலின், பாணாற்றுப்படையும் ஆயிற்று) -- -

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே; இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே, இறையுறு விழுமம் தாங்கி, அமர்அகத்து இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து, மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி, 5

வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து ஈர்ந்தை யோனே, பாண்பசிப் பகைஞன், இன்மை தீர வேண்டின், எம்மொடு நீயும் வம்மோ? முதுவாய் இரவல! யாம்தன் இரக்கும் காலைத் தான்எம் 10

உண்ணா மருங்குல் காட்டித், தன்ஊர்க் கருங்கைக் கொல்லனை இரக்கும், 'திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே. பாணர்களை வருத்தும் பசிக்கொரு பகைவன், ஈர்ந்தை என்னும் ஊரிலே உள்ளனன். நின் வறுமை தீரவேண்டினால், எம்மொடு நீயும் அவன்பால் வருவாயாக. முன், யாம் அவனை