பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

213


கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக், கடிய கதழும் நெடுவரைப் படப்பை வென்றி நிலைஇய விழுப்புகழ் ஒன்றி, 5 இருபால் பெயரிய உருகெழு மூதூர்க், கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய நீடுநிலை அரையத்துக் கேடும் கேள், இனி, துந்தை தாயம் நிறைவுற எய்திய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! 10 நும்போல் அறிவின் நுமருள் ஒருவன் புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்! எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்று, இவர் கைவண் பாரி மகளிர் என்ற என் 15

தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும! விடுத்தனென், வெலிஇயர் நின் வேலே! அடுக்கத்து அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்

இரும்புலி வரிப்புறம் கடுக்கும் 2O பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!

புகழ்பெற்ற நும் முன்னோரின் சிற்றரையும் பேரரையும் என்ற பழைய ஊர்கள், வெற்றி நிலைபெற்றுச் செல்வத்தாற் சிறந்தனவேனும், கழாஅத் தலையாரென்னும் புலவரை நின் முன்னோன் ஒருவன் நின்போல் அறிiனனாக இகழ்ந்ததனால் கேடுற்று அழிந்தன. புலிகடிமாலே நின் முயற்சியுடன் நின் தந்தை தேடித் தந்த பொருளாலும் நிறைந்தவனே! பெருமலையிடத்து ஊர்களையுடைய நாட்டிற்கு உரியவனே! கேள்: இவர் எவ்வி வேளின் பழைய குடியிலே சேர்ந்தவராகப் பாரிமகளிர் என்று நின்பாற் சொன்ன, தெளியாத என் உரையைப் பொறுப்பாயாக யான் சென்று வருவேன். வெல்க நின் வேல்

சொற்பொருள்: கடிய கதழுந் நெடுவரைப் படப்பை - விரைய ஒடும் மலைபக்கத்து. 16. நோற்றிசின் - பொறுப்பாயாக. 19. மாத்தகட்டு ஒள்வீ - கரிய புறவிதழையுடைய ஒள்ளிய பூ, தாய துறுகல் - பரந்த பொற்றைக்கல், 21 வைப்பின் ஊர்களையுடைய

§ 203. இரவலர்க்கு உதவுக!

பசுங்குடையார். பாடப்பட்டோன்: சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி. திணை: பாடாண். துறை: பரிசில். -