பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

225


பின்னர் நின் செல்வத்தை யாவருக்குத் தரப்போகின்றாய்? நீ தோற்றாலோ, பழிதான் மிஞ்சும். ஆக்வே, நீ நின் முயற்சியை நிறுத்திவிடுக! நின் மறச்செயல் போதுமானது. இனி அறச்செயல் களால் புகழ்பெற முயல்க எழுக கோமானே! வாழ்க நின் புகழ்!

சொற்பொருள்: 4. இருவரை - புதல்வர் இருவரை. 5. தொன்று உறை - பழையதாய்த் தங்கப்பட்ட பகைஞரும் - பகை வேந்தராகிய சேர பாண்டியரும். 6. அமர் வெங்காட்சியொடு - போரின்கண் விரும்பிய காட்சியுடனே. 13. உயர்ந்தோர் உலகம் - தேவருலகம். 14. வெய்யோயே விரும்புபவனே. 16. எஞ்சுவை அவர்க்கு ஒழிய யாவர்க்குக் கொடுப்பை.17, உலையின் தோற்பின், 20. அழிந்தோர்க்கு - அஞ்சினோர்க்கு 22. நன்று - நல்வினையை. மற்று: அசை, தில் : விழைவின்கண் வந்தது.

214. நல்வினையே செய்வோம்!

பாடியவர்: கோப்பெருஞ் சோழன். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி.

(உயிருக்கு உறுதி தருவனவாகிய மெய்ந்நெறிகளின்பாற் செல்லுதலைப் பற்றி வலியுறுத்திக் கூறும் சிறந்த செய்யுள் இது. 'இசைநட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தலே சிறந்த வாழ்வு' என்கிறான் சோழன்)

செய்குவம் கொல்லோ நல்வினை! எனவே ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே. யானை வேட்டுவன் யானையும் பெறுமே; குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே, . 5

அதனால், உயர்ந்த தேட்டத்து உயர்ந்திசினோர்க்குச் செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின், தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்; தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின், மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; 10

மாறிப்பிறவார் ஆயினும், இமயத்துச் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத், தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே.

உள்ளத்திலே தெளிவற்றோர், 'நம்மாலும் நல்வினை செய்யக்கூடுமோ? என்ற ஐயம் கொண்டு, அதனின்றும் நீங்க வகையின்றித் துணிவற்றவராக மயங்குவர். யானை வேட்டைக்குப் போகும் உள்ள உரம் உடையவன் யானையையே எளிதாக வென்று