பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

241


சொற்பொருள்: 1. அல்கவும் - பிறிதொன்றால்: ஏதம் இன்றிக் கிடப்பவும். 2. வம்பலர் வழிப்போவார். 12. வாழ்தலின் வரூஉம் - வாழ்தல் ஏதுவாக வரும் 13. வீழ்குடி - தளர்ந்த குடியையுடைய 15. பருகி ஆர்குவை பருகி நிறைவை. மன் : கழிவின்கண் வந்தது.

231. புகழ் மாயலவே!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன். அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

(“ஞாயிறு அன்னேன் புகழ் மாயலவே என்று கூறுகின்றார். அதியமானின் சிறப்பினை இது நன்றாகக் காட்டும்)

எரிபுனக் குறவன் குறைல் அன்ன கரிபுற விறகின் ஈம ஒள் அழல், குறுகினும் குறுகுக; குறுகாது சென்று, விசும்பஉற நீளினும் நீள்க; பசுங்கதிர்த் திங்கள் அன்ன வெண்குடை 5

ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே!

எரிசுட்ட தினைக் கொல்லையிலே குறவன் தறித்த துண்டம் போன்று கரிந்த புறத்தை உடைய விறகு அடுக்கிய ஈமத் தீயிலே, அஞ்சியின் உடல் உள்ளது. இனி, அந்த ஈமத்தி அவன் உடலைச் சிதையாமல் சிறுகினும் சிறுகுக: அல்லது சிறிதாகாது வானம் முட்டச் சென்று நீண்டாலும் நீள்க. ஆயின், திங்களன்ன வெண்கொற்றக் குடையுடைய ஞாயிறன்ன அஞ்சியின் புகழோ என்றும் அழியாதது (தம் நண்பனின் உடலை எரியூட்டக் கண்ட ஒளவையார் கசிந்து பாடியது இது)

232. கொள்வன் கொல்லோ!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன். அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பொதுவியல், துறை: கையறுநிலை. திணை: தும்பை. துறை: பாண்பாட்டும் ஆம். -

(நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோன், நாரரி சிறு கலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ? என்று அவனது நடுகல்லைக் கண்டு பாடுகின்றார்)

இல்லா கியரோ, காலை மாலை!

அல்லா கியர், யான் வாழும் நாளே!

நடுகல் பீலி சூட்டி, நார்அரி

சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ -

கோடு உயர் பிறங்குமலை கெழீஇய - 5

நாடுஉடன் கொடுப்பவும் கொள்ளாதோனே?