பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

புறநானூறு - மூலமும் உரையும்


மறத்துறையினும் அறமே நிகழும் என்பதற்கு இச் செய்யுள் சான்றாகும் (தொல்கு2 நச்)

"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடையீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் . . எம்.அம்பு கடிவிடுதும், நும்அரண சேர்மின் என, 5

அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமிடதங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன் நன்னிப் பஃறுளி மணலினும் பலவே! 10

வன்மை உடையரோடு எதிர்த்துப் போரிடுவதே ஆற்றல் உடையவரின் இயல்பு; எனவே இம் மன்னன், தான் முற்றுகையிடும் நகர்களில் உள்ள வன்மை அற்றாரைப் பாதுகாவலான இடஞ் சேருமாறு முதற்கண் எச்சரிப்பான் என்கிறார் புலவர். அவ்வாறு எச்சரிக்கப்படுவோர் பயன்தரும் ஆனினம், அவ்வியல்புடைய பார்ப்பன மக்கள். பெண்டிர், பிணி உடையவர், புதல்வர்ப் பெறாதோர் ஆவர். இவ்வாறு அறவழி நடக்கும் இயல்பும், துணிவும் உடையவனான எம் குடுமியே! நீ வாழ்க! கடல் தெய்வத்துக்கு முந்நீர் விழா எடுத்து, அதனுள் கூத்தர்க்குப் பசும்பொன் வழங்கிய நெடியோனால் ஆக்கப்பட்ட நல்ல நீரையுடைய பஃறுளி ஆற்று மணலிலும் பல ஆண்டுகள் நீ புகழுடன் வாழ்வாயாக! - .

சொற்பொருள் : தென்புலம் வாழ்நர் - தென் திசைக்கண் வாழும் பிதிரர்கள்; தம் குலத்தில் வாழ்ந்து இறந்து போன முன்னோர்கள். அருங்கடன் என்றது, அவர்க்குச் செய்யும் நினைவுக் கடன்களை, அக்கடனைப் பொன்போற் கருதிப் பாதுகாத்துச் செய்யும் இயல்புடைமை பற்றிப் பொன்போற் புதல்வர் என்றார். 6. பூட்கை மேற் கொள்ளுதலையுடையது. பூண்+கை: தொழிற்பெயர். வயிரியர் - கூத்தர். 10. முந்நீர் - கடல்.

10.குற்றமும் தண்டனையும் .

பாடியவர்: ஊன் பொதி பசுங்குடையார். பாடப்பட்டோன்: சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி. திணை: பாடாண். துறை: இயன்மொழி. .