பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

17


கருவூரிலிருந்து அரசியற்றியவன் இவன். அவ்வூர்ச் சிறுமியர் மென்மயிரோடு திரண்ட முன்கையினர். வண்டல் இழைத்த சிறு வீட்டிலே, பாவை புனைந்து, அப் பாவைக்குக் கோட்டுப்பூச் சூடி விளையாடி மகிழ்பவர். ஆன் பொருநை நீரின்கண் பாய்ந்து நீர் விளையாடி மகிழும் இயல்பினர். ஆங்குப், புலவர் பாடுதற்கு உரிய வெற்றி வேந்தனாக இவன் விளங்கினான். பகைத்த மன்னரின் காவல் செறிந்த அரண்களை அழித்துப் புறக்கொடை பெற்றுச் சிறந்தான். அவ்வீரத்தை வியந்து பாடினாள் பாடினி. அவள், பல கழஞ்சால் செய்யப்பட்ட பசும்பொன் அணிகலன்களைப் பரிசாக அவனிடமிருந்து பெற்றாள். அவளுக்கு இயைய, முதல் தானத்திலே பாடிவருபவன் பாணன். அவன், பொன்னால் செய்து, வெள்ளி நாரால் தொடுக்கப்பெற்ற தாமரைப் பூமாலையினைப் பரிசாகப் பெற்றான். யானோ ஏதும் பெற்றிலேன். அவர்களுக்கு வழங்கியது போன்று எனக்கும் சிறந்த பரிசில் வழங்குவாயாக, பெருமானே! என்றது இது. .

சொற்பொருள்: 1. அரி - மென்மை. 2 மடமங்கையர் - பேதை மகளிர் 3 வரி மணல் புனைபாவை - வண்டல் மணலால் இழைத்த சிற்றிற்கண் செய்த பாவை, பஞ்சாங்கோரைப் பாவையும் ஆம் 5. பொருநைப் புனல் - ஆன் பொருந்தத்து நீர்; 'ஆன் பொருந்தம்' என்பது, கரூரின் சமீபத்திலுள்ள ஓர் ஆறு. 9. துப்புறுவர் - வலியோடு எதிர்த்துவரும் பகைவர். புறம் பெற்றிசின் - புறமுதுகு காட்டியோடும் தகுதியைத் தான் பெற்றான் என்பதாம். 11. மறம் பாடிய வீரத்தன்மையைப் புகழ்ந்து பாடிய 12 கழஞ்சு - சிறிய அளவுடையது; ஆகுபெயராற் பொன்னை உணர்த்திற்று. 17. ஒள்ளழல் புரிந்த தாமரை - விளங்கிய அழலின்கண்ணே பொன்னை உருக்கி, அதனாற் செய்த தாமரை போலும் பூக்கள் அமைந்த பொன் அணி,

12. அறம் இதுதானோ?

பாடியவர்: நெட்டிமையார். பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி திணை: பாடாண். துறை: இயன்மொழி. -

(பழித்ததுபோலப் புகழ்ந்தது இது. 9, 6ஆவது புறப்பாட்டுக் களையும் இத்துடன் கற்று, இவன் புகழை அறிக. 'கொடுத்தல் எய்திய கொடமை க்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர் இளம்பூரணனார் (தொல், புறத். சூ. 7) -

பாணர் தாமரை மலையவும், புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்,