பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

285


வயல்களிலே பிறழும் கெண்டை மீன்களைப் போல் வேல்கள் மார்பிலே வந்து பாய்ந்து கிடந்தாலும், பொற்பட்டம் கட்டிய களிற்று யானையானது தன் கொம்புகளால் குத்தித் தன் கால்களால் மிதித்தாலும், புறமிட்டு ஒட நினையாத பெருமை பொருந்திய வீரமறவர் இவர் இவரெல்லாம் வளமுடைய மருதநிலை ஊர்களைப் பெற்று வாழ்வதிலே பயன் ஏதுமின்று; போரிலே வீழ்ந்து வீரசுவர்க்கம் எய்துவதே தமக்குச் சிறந்தது என விரும்புபவர் இவர். இவர்கள் போரிடப் போகின்றனர். புதிய வேந்தனின் படையும் அதோ வந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்தே, அவண் நிகழும் போரினை, நாமும் காணலாம் வருவீராக!

288. மொய்த்தன பருந்தே!

பாடியவர்: கழாத்தலையார். திணை: தும்பை. துறை: மூதின் முல்லை.

('முயக்கிடை ஈயாது பருந்தினம் மொய்த்தன என்று களத்திற் பட்டுக் கிடந்த வீரனின் நிலையைக் கண்டு மகளிர் வருந்தியதாகக் கூறுகின்றனர். 'முரசம் செய்யும் முறையைச் செய்யுள் காட்டுவதும் காண்க) -

மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின் அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து, வென்றதன் பச்சை சீவாது போர்த்த திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க, ஆர்.அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர 5

நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து, அருகுகை....................... மன்ற குருதியொடு துயல்வரும் மார்பின் முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.

இரண்டு கொல்லேறுகளைத் தம்முள் போரிடச் செய்து, அதன்கண் வென்ற ஏற்றின் தோலால் மயிரும் சீவாது அமைத்த போர்முரசும் அதோ முழங்கிக்கொண்டிருக்கிறது.பெரும்போரும் நடந்து கொண்டிருக்கிறது. மிக்க வீரமுடன் போரிட்டான் மறவன் ஒருவன். ஆயினும், அவன் அறியாதவாறு, அவன் மார்பிலே வந்து தைத்தது பகைவர் விடுத்த நெடுவேல் ஒன்று. அது கண்டு தன் நிலைக்கு நாணங் கொண்டவனே போலத் தலைகவிழ, நிலத்திலே குருதிவந்து சொட்டச் சாய்ந்தான். அவன் மனைவி அவன் பட்டதறிந்து வந்து அவன் மார்பைத் தழுவ முயன்றனள். அதற்கும் இடந் தராது, பருந்துகள் அப் புண்ணை மொய்த்தன. போரின் வெம்மைதான் எத்துணைக் கொடியது!