பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

புறநானூறு - மூலமும் உரையும்


289. ஆயும் உழவன்! பாடியவர்: கழாத்தலையார். திணை: துறை: தெரிந்தில.

((வெட்சித் திணைத் துறைகளுள், மறங் கடை கூட்டிய குடிநிலை கூறியதற்கு இளம்பூரணர் காட்டுவர் (தொல். புறத். சூ. 4); அவ்வாறு கொள்ளலும் பொருந்தும்)

ஈரச் செவ்வி உதவின ஆயினும், பல்எருத் துள்ளும் நல்எருது நோக்கி, வீறுவீறு ஆயும் உழவன் போலப், பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய மூதி லாளர் உள்ளும், காதலின் 5

தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை, 'இவற்கு ஈக!' என்னும்; அதுவும்.அன்றிசினே: கேட்டியோ வாழி - பாண! பாசறைப், 'பூக்கோள் இன்று' என்று அறையும் மடிவாய்த் தண்ணு மை இழிசினன் குரலே? 10 கழனியிலே ஈரம் உழவு பருவமாகவே உளதென்றாலும், தன் எருதுகள் பலவற்றினும் நல்ல எருதையே தேர்ந்தெடுத்து நாளேர் பூட்டி உழ எண்ணுவான் உழவன். அதுபோலப் பெருமைபெற்ற பழங்குடிப் பண்புகள் பலவும் நிரம்பிய மறக் குலத்தாரே எனினும், 'இவனே சிறந்தவன் என, எம் புதல்வனைக் கருதித் தனக்கு முகந்து தருகின்ற மது நிரம்பிய பொற்கலத்தை, 'இவனுக்குத் தருக!” என்றனன் வேந்தன். அவனது பாசறையினின்றும் பறை முழங்குகிறது. மறவரே, பூச் சூடுமின்’ என, அது முழங்குவது கேட்டாயோ? பாணனே நீயும் வாழ்க!

290. மறப்புகழ் நிறைந்தோன்!

பாடியவர்: ஒளவையார். திணை: கரந்தை. துறை: குடிநிலையுரைத்தல்

|தலைவனது குடியினது வழிவழி வருகின்ற மேம்பாட்டைக் கூறிப் போற்றுதலைக் காணலாம். உறைப்புழி ஒலைபோல மறைக்குவன் பெரும, நின்னைக் குறித்து வரு வேலே என, அவ் வீரனது சிறந்த பேராண்மையை எடுத்துக் கூறுகின்றனர். தகடூர் போரில் அதியனுக்கு மெய்த்துணை நின்றான் ஒருவனது சிறப்பை இவ்வாறு பாடிப் பாராட்டினர் போலும்! 'தார்நிலையின்பாற் படும்’ என்பர் நச்சினார்க்கினியர் (தொல்.புறத்சூ17)

இவற்குஈந்து உண்மதி, கள்ளே, சினப்போர் இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்!