பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

287


நுந்தை தந்தைக்கு இவன்தந்தை, எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன்

அடுத்துஎறி குறட்டின், நின்று மாய் தனனே, 5 மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும், w உறைப்புழி ஒலை போல - மறைக்குவன் - பெரும நிற் குறித்துவரு வேலே. வேந்தே! நின் பாட்டனுக்கு இவன் பாட்டன் மெய்க் காப்பாளனா யிருந்தவன். நின் பாட்டன்மீது பகைவர் எறிந்த வேலைத் தன் மார்பிலே தாங்கி, ஆர்க்காலோடு தச்சன் வடிக்கும் குடம்போல, வேல்கள் பாயமாய்ந்தவன் இவன் பாட்டன்.இவனும் மறப்புகழ் நிறைந்த வலிமையுடையவன்.கதிரவனின் வெம்மையான கதிர்கள் உறைக்கும்போது ஒலைக்குடை காத்தலைப் போல, நின்னைக் குறித்து வரும் வேலையும் மறைத்துக் காக்கும் ஆண்மையாளன் இவன். ஆதலின், இவனுக்கே முதலில் கள்ளினைத் தருக! அதன் பின்பே நீயும் உண்பாயாக!

குடிநிலை உரைத்தல்-பழமையிலும் வீரத்திலும் புகழ் பெற்ற குடியின் வரலாற்றைச் சொல்லுதல். உறை - மழையும் ஆம்.

291. மாலை மலைந்தனனே!

பாடியவர்: நெடுங்கழுத்துப் பரணர். திணை: கரந்தை துறை: வேத்தியல்.

(களத்தில் வீழ்ந்துபட்டான் ஒரு தலைவனுக்கு வருந்தி, இவன் உயர்வைப் பாடிய செய்யுள் இது. 'கொன்னுஞ் சாதல் வெய்யோன் என, அவனது போர்விருப்ப மிகுதின்ய உரைத்தமை காண்க. 'கொடுத்தல் எய்திய கொடைமை' என்பதற்கு, நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவர்) சிறாஅஅர்! பாடுவல் மகாஅஅர்; துவெள் அறுவை மாயோற் குறுகி இரும்புள் பூசல் ஓம்புமின், யானும், விளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்; என்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே - - 5 கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை! மணிமருள் மாலைசூட்டி, அவன்தலை ஒருகாழ் மாலை தான்மலைந் தன்னே! சிறுவர்களே! துடியர்களே! பாடல் வல்லோரே! ஒடுங்கள்! ஒடுங்கள்! வெள்ளாடை அணிந்து, அதோ புண்பட்டு வீழ்ந்து