பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

புறநானூறு - மூலமும் உரையும்


302. வேலின் அட்ட களிறு!

பாடியவர்: வெறிபாடிய காமக் கண்ணியார்.(காமக் கணியார் எனவும் பாடம்) திணை: தும்பை. துறை: குதிரை மறம்.

(நோக்கினர்ச் செகுக்குங் காளையாகிய ஒரு மாவீரனது போர்மலைந்த திறத்தை வியந்து கூறுகின்றனர். 'வேலின் அட்ட களிறு, பெயர்த்து எண்ணின்', 'விண் இவன் விசும்பின் மீனும், தண் பெயல் உறையும் உறையாற்றாவே' என்றும், இவனது மறச்செயலை வியந்து பாடுகின்றனர்)

வெடிவேய் கொள்வது போல ஒடித் தாவுபு உகளும், மாவே, பூவே, விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய ஐது.அமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் 5

கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய, நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறுர்; நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், விண்ணிவர் விசும்பின் மீனும், 10

தண்பெயல் உறையும், உறையாற் றாவே.

வளைத்திழுத்துப் பின்னர் விட்டுவிட்ட மூங்கிலைப்போல அவன் குதிரைகள் துள்ளித் தாவிச் செல்லும் வலிவும் விரைவும் உடையன. விறலிகளுக்குப் பொற்பூக்கள் அளித்தான். பாணர்க்கு நரந்தம்பூ மாலைகள் வழங்கினான்.ஆனால், இவன் சிற்றுார்களைப் பகைவர் கவர எண்ணிப் போருக்கு வந்த போதோ, கொல்களிறு போலச் சினந்தும் எழுந்தான். களத்திலே அவன் கொன்று குவித்த களிறுகளை எண்ணினால், அவை வானத்து மீன்களினும், கார் முகில் பொழியும் துளிகளினும் மிகுதியாகும் என்னலாமே.

சொற்பொருள்: 1. வேய்வெடி கொள்வதுபோல - வளைத்துவிட்ட மூங்கில் மேல்நோக்கி எழுவதுபோல. 6. கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய கைவிரலால் நரம்பினை இயக்கிப் பாடுதலை யுடைய பாணர்கட்குக் கொடுக்கப்பட்ட, 7. நிரம்பா இயவின் கரம்பைச் சீறுர் - குறுகிய வழிகளையுடைய கரம்பைகள் நிறைந்த சிற்றுார்கள். -

303. மடப்பிடி புலம்ப எறிந்தான்!

பாடியவர்: எருமை வெளியனார். திணை: தும்பை. துறை:

குதிரை மறம். -