பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

309


மறைந்துவிட்டது.முற்றத்திலுள்ள தினைச்சோறு புறாவும் இதலும் மிகவும் உண்பதற்காகச் சமைத்தது. அதுவும், சுட்ட முயலிறைச்சியும் உள்ளது. அதைத் தருகிறோம். இங்கு வந்து இருந்து உண்பாயாக

320. கண்ட மனையோள்!

பாடியவர்: வீரை வெளியனார். திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை.

(வேட்டுவத் தலைவன் ஒருவனது இல்லக் கிழத்தியின் சால்பையும், அவன் சிறப்பையும் கண்டார் வியந்து போற்றுவதாக அமைந்த செய்யுள் இது. "வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும் அருகாது ஈயும் வண்மை உரைசால் நெடுந்தகையாளன்' அவனாதலையும் உரைக்கின்றது)

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப், பந்தர் வேண்டாப் பலர்துங்கு நீழல், - கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப், பார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர் தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளையாட, 5

இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும் இல்வழங் காமையின், கல்லென ஒலித்து, மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி 10

காணக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென, ஆர நெருப்பின், ஆரல் நாறத்

தடிவுஆர்ந் திட்ட முழுவள்ளுரம் - இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித், தங்கினை சென்மோ, பாண! தங்காது 15

வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும் அருகாது ஈயும் வண்மை உரைசால் நெடுந்தகை ஒம்பும் ஊரே.

முற்றத்திலே பலருங்கூடிப் படுத்துறங்கும் அளவு நிழல் தந்து நின்ற ஒரு பெரிய மரம், அதன்மேல் முன்னைக்கொடியும் அடர்ந்து படர்ந்துள்ளது. வேறு பந்தர் வேண்டாது அதுவே முற்றத்தின் பந்தராக நிழல் செய்ய, அந் நிழலிலே யானை வேட்டையாடிவரும் வேட்டுவனான அவ் வீட்டின் தலைவன் கிடந்து உறங்கிக் கொண்டிருக்கிறான். பகல் வேளையிலும், தன் பிணைமேல் காதல்