பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

புறநானூறு - மூலமும் உரையும்


பாடும் தகுதிகள் பலவும் உடையவன். அதனால், இவற்றுள், எதனில் மிகுதியானவன் என்று சொல்லமுடியாத பெருஞ் சிறப்பினன் என்கிறார் புலவர்.

தேரோடித் தடம் பதிந்த பகைவர் நாட்டுத் தெருவிலே, கழுதைகளைப் பூட்டி உழுதாய்! புள்ளினம் ஒலி முழங்கும் விளைவயலினிடத்தே, தாவிச் செல்லும் குதிரைகள் பூட்டிய தேர்களைச் செலுத்தி அழித்தாய்! பகைவர் போற்றிக் காத்த காவற்குளங்களிலே, யானைகளை விட்டுப் பாழ் செய்தாய்! பகைவர் மீது அவ்வளவு சினமும், அதனைச் செயற்படுத்தும் மிகுந்த ஆற்றலும் உடையவன் நீ நின்னை வெல்லுதலின் பொருட்டாக வேல் கொண்டெழுந்த பெரும் பகைவரும், நின் தூசிப்படையின் எதிரே நிற்கவும் ஆற்றாது, மேற்கண்டவாறு பாழ்பட்டுப் பலராக அழிந்தனர். இதேபோன்று, வேத விதிப்படி தலைமை பூண்டு பெரிய பெரிய யாகங்கள் பலவும் நீ இயற்றுவித்தனை பெருமானே கச்சணிந்த மதர்த்த மார்பினரான விறலியர் போற்றிப் பாடும் புகழிற்கு ஏற்ற தகுதிமிக்க வலிமை உடையோனே! இவற்றுள், எவ்வகையால் நீ மிகுதியானவன் என்று நீயே எமக்கு உரைக்க மாட்டாயோ?

சொற்பொருள்: 1. ஞெள்ளல் - தெரு, 2. புல்லினம் - புல்லிய நிரையினை அதாவது கழுதைகளை.3.நனந்தலை அகன்ற இடம். 9.அவர - அகரம் ஆறனுருபு: பன்மைக் கண் வந்தது; அவருடைய என்பது பொருள்.12.பலகை-கிடுகு:கேடகம்.14.தார்-துசிப்படை, முன்செல்லும் படை 15. நசை தர - தம் ஆசை கொடு வர. பிறக்கொழிய பின்னொழிய 16, வசை - பழிப்பு. 18. கண்ணுறை - வேள்விக்குரிய சமிதை முதலியன. 21, யூபம் - வேள்வி செய்யுமிடத்து நடப்படும் தூண். 23. மண்கனை - மார்ச்சனை முழவின்கண் இன்னோசை உண்டாகும் பொருட்டுப் பூச்சிடும் ஒருவகைச் சாந்து. 24. வஞ்சி - பகைமேற் செல்லுதலைக் குறித்த துறையமைந்த புறப்பாடல்.

16. செவ்வானும் சுடுநெருப்பும்!

பாடியவர்: பாண்டரங் கண்ணனார். பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி,திணை:வஞ்சி.துறை: மழபுல வஞ்சி. -

("ஏம நன்னாடு ஒள் எரியூட்டி' என்றதனால், இது மழபுல. வஞ்சி ஆயிற்று. ஆசிரியர் இளம்பூரணனார், 'எரிபரந்து எடுத்தல்'

என்னும் துறைக்கு இதனை எடுத்துக் காட்டுவர்) -